23 கி.மீ மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் 69 கார் இது தான்! இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சுஸூகி நிறுவனம் தனது பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட் காரில் ஏகப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விரைவில் இதன் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் மற்றும் ஹைபிரிட் வெர்ஷன் என இரண்டு வெர்ஷன்களும் அறிமுகமாக உள்ள நிலையில், தற்போது புதிதாக கிளாசிக் 69 என்ற எடிசனை சர்வதேச மோட்டார் ஷோ ஒன்றில் காட்சிப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் பாருங்கள்.

சுஸூகி ஸ்விஃப்ட் கார் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான காராக இருக்கிறது. இந்த காரின் லுக் மற்றும் இந்த காரில் உள்ள அம்சங்களுக்காகவே பலர் இந்த காரை வாங்கி வருகிறார்கள். முக்கியமாக இந்த கார் விலை குறைவாக இருப்பதால் பலர் முதல் முதலாக கார் வாங்கும்போது இந்த காரை தான் வாங்க வேண்டும் என்ற முடிவில் கார் வாங்குகிறார்கள்.

Swift Classic 69 Edition

இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்த ஸ்விஃப்ட் காரில் ஏகப்பட்ட மாடல்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இதன் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் மற்றும் ஹைபிரிட் வேரியன்ட் கார்களையும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் புதிதாக கிளாசிக் 69 என்ற புதிய வேரியன்ட் காரை தற்போது சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக்கில் தற்போது சர்வதேச மோட்டார் ஷோ நடந்து வருகிறது. இதில் சுஸூகி நிறுவனம் தனது ரெட்ரோ ஸ்டைலுடன் கூடிய ரேஸிங் இன்ஸ்பயர் டிசைன் கொண்ட ஸ்விஃப்ட் கிளாசிக் 69 என்ற காரை முதன்முதலாக காட்சிப்படுத்தியுள்ளது. இதன் டிசைன் கலர் மற்றும் அம்சங்கள் எல்லாம் மற்ற ஸ்விஃப்ட் காரில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது.

Swift Classic 69 Edition

இந்த காரின் வெளிப்புறத் தோற்றத்தை பொறுத்த வரை லைட் கிரீன் கலர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்களை கவரும் வகையில் கருப்பு நிற ஹைலைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் முன்பக்கம் உள்ள கிரில், பம்பர், சைடு மோல்டிங், பில்லர், ஓஆர்விஎம், ரூஃப், டிஃப்யூசர், ரியர் பம்பர் ஆகிய பகுதிகள் எல்லாம் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

இந்த காரில் கருப்பு நிற பாடி கிளாடிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஹெட்லைட்டை பொருத்தவரை தற்போது விற்பனையாகி வரும் மாடலில் இருக்கும் அதே ஹெட்லைட் மாடல் தான் கொடுக்கப்பட்டுள்ளது0 ஆனால் இதில் ஹாலஜன் பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. டிரெடிஷனலான குரோம் ரிப்லேக்ட்டர் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் உள்ள சுஸூகி லோகோவில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

Swift Classic 69 Edition

இந்த காரின் பேனட்டில் டூயல் ரேஸிங் ஸ்ட்ரைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 69 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஸிங் ஸ்டிரைப்புகள் டெயில் கேட்டிலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் விலை பொருத்தவரை அலாய் வீல் இல்லாமல் ஸ்டீல் வீல் வழங்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக ஒரு பெட்ரோல் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின்பக்கம் பாலிகோனல் வடிவமைப்பில் போலியான எக்ஸாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க பவர்ஃபுல்லாக இருக்கிறது.

இந்த காரின் டெயில் லைட்டை பொருத்தவரை தாய்லாந்து நாட்டில் விற்பனையாகி வரும் ஸ்விஃப்ட் காரின் அதே டிசைன் தான் இதிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை அனைத்தும் அனலாக் மற்றும் பிசிகல் பட்டன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த காரின் உட்புறம் டிஜிட்டலில் எந்த விஷயமும் இடம்பெறவில்லை.

Swift Classic 69 Edition

உட்புற கலர் தீமை பொருத்தவரை டூயல் டோன் தீமில் வழங்கப்பட்டுள்ளது. ஐவரி மற்றும் பேட்ஜ் கலர் ஷேடுகளில் வழங்கப்பட்டுள்ளன. லைட் கிரீன் கலர் டேஷ் போர்டு மற்றும் டோர்களில் காண முடிகிறது. வெளிப்புறத்தில் உள்ளதை போல உட்புறத்திலும் பேட்ஜ் நிற லெதர் கொண்டு கார்னிஷ் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக டோர் பகுதியில் இதன் சிறப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை தாய்லாந்து மற்றும் மற்ற ஆசிய மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் ஸ்விஃப்ட் காரை போல இந்த ஸ்விஃப்ட் கிளாசிக் 69 எடிசன் காரிலும் கே 12 எம் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 83 பிஎஸ் பவரையும் 108 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 23 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் வடிவமைக்கப்படும்போது வழக்கமா ஸ்விஃப்ட் கார் வடிவமைக்கப்படும் ஹார்ட்ராக்ட் பிளாட்பார்மில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் குறைந்த எடை கொண்ட காராகவும் அதே நேரம் காம்பேக்ட்டான காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் குறைந்த எடை இருப்பதன் காரணமாகவே 23 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 2, 2024, 12:01 [IST]
English summary
Suzuki swift classic 69 edition debuts at bims 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X