கருணையே இல்லாம புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை அடிச்சு துவம்சம் பண்ணிட்டாங்க! எதுக்காக தெரியுமா?
2024 சுஸுகி ஸ்விஃப்ட் (Suzuki Swift) காரின் பாதுகாப்பு தரத்தை அறிந்துக் கொள்ளும் பொருட்டு யூரோ என்சிஏபி (Euro NCAP), அந்த காரை சமீபத்தில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. பலநிலைகளில் வைத்து இந்த காரை ஆய்விற்கு உட்படுத்தியதில் புதிய ஸ்விஃப்ட் 3 ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருக்கின்றது. ஐந்திற்கே மூன்று ஸ்டார்கள் ரேட்டிங்கை அந்த கார் பெற்றிருக்கின்றது. இந்த மதிப்பெண், புதிய ஸ்விஃப்ட் மிக அதிக பாதுகாப்பு தரம்மிக்கது என்பதற்கான அர்த்தம் இல்லை. அதேவேளையில், மிக மோசமான பாதுகாப்பு தரம்மிக்க கார் புதிய ஸ்விஃப்ட் என்றும் அந்த மதிப்பெண் குறிப்பிடவில்லை.
ஓர் நடுநிலையான பாதுகாப்பு தரம்மிக்கது இது என்பதையே இந்த மதிப்பெண்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. அதேவேளையில், தற்போது ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இருப்பது ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்விஃப்ட் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் காரை இன்னும் எந்த என்சிஏபி அமைப்பும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தவில்லை.

விரைவில் புதிதாக தொடங்கப்பட்ட பாரத் என்சிஏபி இந்த வேலையை பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவிற்கான கார்களை பாரத் என்சிஏபி-யே மோதல் ஆய்விற்கு உட்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை டாடாவின் தயாரிப்புகளான நெக்ஸான் இவி, பஞ்ச் இவி, சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய கார் மாடல்களையே அது மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது.
நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரே ஐரோப்பிய நாடுகளிலும் விற்கப்படுகின்றது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 26.9 புள்ளிகளையே பெற்றிருக்கின்றது. சதவீதத்தில் பார்த்தால் இது நூற்றுக்கு 67 சதவீதம் மட்டுமே ஆகும். இதேபோல், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 100க்கு 65 சதவீத புள்ளிகளையே அது பெற்றிருக்கின்றது.

அதாவது, 32.1 புள்ளிகளையே அது பெற்று இருக்கின்றது. புதிய ஸ்விஃப்ட் காரில் பயணிக்கும்போது கொஞ்சம் கவனத்துடனேயே பயணிக்க வேண்டும் என்பதையே இந்த புள்ளிகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருந்தும் இந்த கார் இவ்வளவு குறைவான புள்ளிகளையே அது பெற்றிருக்கின்றது.
முன் பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகள், பக்கவாட்டு தலைகளைப் பாதுகாப்பதற்கான ஏர் பேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, மார்பகம் மற்றும் இடுப்பு பகுதிக்கான ஏர் பேக்கும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தனை ஏர் பேக்குகளைக் கொண்டிருக்கின்ற போதிலும் அது மிகமிக குறைவான ரேட்டிங்கையே பெற்றிருக்கின்றது.
ஏர் பேக்கை மட்டுமே இந்த காரில் சுஸுகி வாரி வழங்கவில்லை. அதில், பயணிக்கு ஏற்ப சீட் பெல்ட்டை தானாக இருக்கும் வசதி, ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (Advanced Driver Assistance System) ஆகியவற்றையும் அது தாங்கி இருக்கின்றது.
இந்த மாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் புதிய ஸ்விஃப்ட் இவ்வளவு குறைவான பாதுகாப்பு புள்ளிகளைப் பெற்றிருப்பதுதான் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்து உள்ளது. குறிப்பாக, அடாஸ் அம்சம் இதில் இடம் பெற்ற பின்னரும் பாதுகாப்பு ரேட்டிங் குறைவாக பெற்றிருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சமே. இந்த அம்சத்தின் வாயிலாக தொழில்நுட்ப ரீதியான பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
உதாரணமாக, ஓர் அசிஸ்டன்ட் கூட இருந்து ரிவர்ஸ் எடுக்க, சுற்றியிருக்கும் வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்கானிப்பது போன்ற சூப்பரான உதவியையே இந்த அம்சம் வழங்கும். இதுதவிர, ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா மற்றும் ஐசோபிக்ஸ் மவுண்ட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், மிக மிக குறைவான பாதுகாப்பை ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்விஃப்ட் காரும் இதேபோல் குறைவான பாதுகாப்பு ரேட்டிங்கையே பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சொல்லப் போனால் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்விஃப்ட் காரை ஐரோப்பிய நாடுகளுக்கான ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவான அம்சங்களையே அது கொண்டிருக்கின்றது. ஆகையால், இதைவிட குறைவான ரேட்டிங்கையும் அது பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








