மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!

ஸ்விட்ச் மொபைலிட்டி (Switch Mobility) நிறுவனம் அதன் புதிய ஐ.இ.வி 4 (IeV 4) என்ற எடை குறைவான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனத்தை உற்பத்தி செய்யும் பணிகளை ஓசூரில் உள்ள அதன் தொழிற்சாலையில் துவங்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று ஸ்விட்ச்சின் தொழிற்சாலையில் இருந்து வெளியாகி உள்ளது.

பிரபலமான & பழமையான அசோக் லேலண்ட்டின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான துணை பிராண்ட் தான் ஸ்விட்ச் மொபைலிட்டி என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். அதாவது, அசோக் லேலண்ட் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை அதன் ஸ்விட்ச் மொபைலிட்டி என்கிற சப்-பிராண்டின் மூலமாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

first switch iev4 vehicle rollout

ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனத்தில் இருந்து கடந்த சில வருடங்களில் நிறைய எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், புதிய எலக்ட்ரிக் வாகனமாக ஐஇவி 4 மாடலை ஸ்விட்ச் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. பேருந்து, லாரி அளவிற்கு எடைமிக்க வாகனமாக இல்லாமல், எடை குறைவான கமர்ஷியல் எலக்ட்ரிக் வாகனமாக ஐஇவி4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்விட்ச் ஐஇவி4 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது துவங்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில், ஓசூரில் அமைந்துள்ள ஸ்விட்ச் மொபைலிட்டியின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஐஇவி4 எலக்ட்ரிக் வாகனத்தை ஸ்விட்ச் மொபைலிட்டியின் சிஇஓ மகேஷ் பாபு கொடியசைத்து விற்பனைக்காக ஷோரூமுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து பேசிய மகேஷ் பாபு, "இந்த சாதனையானது நிலையான இயக்கம் மற்றும் புதுமைகளை நோக்கிய எங்களது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. அதிநவீன தொழிற்நுட்பம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், எலக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலத்தை நாங்கள் வடிவமைக்கிறோம்" என்றார்.

ஐ.இ.வி என்கிற பெயரில் வருங்காலங்களில் இன்னும் நிறைய மாடல்களை ஸ்விட்ச் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதில் முதல் மாடலே, ஐ.இ.வி 4 ஆகும். வருடத்திற்கு ஏறக்குறைய 3,000 ஐஇவி4 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கார்கோ போக்குவரத்துக்காக மட்டுமில்லாமல், கண்டெயினர்களாகவும், குப்பை வாகனம் மற்றும் குளிர்சாதன வேனாகவும் ஸ்விட்ச் ஐஇவி4 எலக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்தலாம்.

ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனம் சமீபத்தில்தான் 12 ஆயிரத்தில் இருந்து 13 ஆயிரம் எடை குறைவான கமர்ஷியல் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து கொடுப்பதற்கான ஆர்டர்களை பெற்றது. இந்த 12,000 - 13,000 வாகனங்களில் நிச்சயமாக ஐஇவி4 எலக்ட்ரிக் வாகனமும் இருக்கும். இவ்வளவு ஆர்டர்களை பெற்றதில் ஸ்விட்ச் நிறுவனத்தின் புதிய சேல்ஸ் மார்க்கெட்டிங் அதிகாரி புஷ்கர் சின்ஹாவின் பங்களிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போல, பாரம்பரியம் மிக்க அசோக் லேலண்ட் நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் ஈடுப்பட கடந்த சில வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. அதற்காக துவங்கப்பட்ட ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனத்துக்கு எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக வரவேற்பு வேகமாக கிடைத்து வருகிறது. விரைவில் கஸ்டமர்களின் கைகளுக்கு செல்லவுள்ள புதிய ஐ.இ.வி 4 எலக்ட்ரிக் வாகனம் ஸ்விட்ச் நிறுவனத்தின் புதியதொரு ஐகானாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2024, 23:59 [IST]
English summary
Switch iev4 electric light commercial vehicle rollout from tamilnadu hosur plant
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+