தமிழ்நாட்டை லேசா எடை போட்டவங்க எல்லாம் இப்ப வாயை பிளக்க போறாங்க.. அப்படி ஒரு புள்ளி விபரம் வெளியாயிருக்கு!

இந்தியர்கள் மத்தியில் சொகுசு வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே தமிழகத்திலும் சொகுசு கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து இருப்பதாக புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. மாநில போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையரகத்தின் (State's Commissionerate of Transport and Safety) தரவுகளின்படி, 30 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலைக் கொண்ட கார்களின் பதிவு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பது தெரிய வந்து உள்ளது.

எண்ணிக்கையில் சொல்ல வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் விலைக் கொண்ட கார் மாடல்கள் 8,475 யூனிட்டுகள் வரை 2023-24 ஆம் நிதியாண்டில் விற்பனையாகி இருக்கின்றன. இது சென்ற நிதியாண்டைவிட மிக மிக அதிகம் ஆகும். 2022-23 ஆம் நிதியாண்டில் 5,797 யூனிட்டுகள் லக்சூரி கார்களே விற்பனையாகின.

Luxury car sales in tamil nadu

இதனுடன் ஒப்பிடுகையில், 46.2 சதவீதம் அதிக ஆடம்பர கார்களே 2023-24 ஆம் நிதியாண்டில் விற்பனையாகி இருக்கின்றன. சொகுசு கார்களின் வளர்ச்சி தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிகரித்து வருவதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த தகவல் அமைந்திருக்கின்றது. ஆமாங்க, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவில் சொகுசு கார்களின் பதிவு எண்ணிக்கை மாநிலத்தில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இதை இன்னும் தெளிவாக உறுதிப்படுத்த வேண்டும் என்றால் 2021-22 ஆம் நிதியாண்டில் 3,954 யூனிட்டுகள் சொகுசு வாகனங்களும், 2020-21 ஆம் நிதியாண்டில் 2,816 யூனிட்டுகள் சொகுசு கார்கள் மட்டுமே விற்பனையாகின. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இந்த அளவு குறைவான எண்ணிக்கையில் சொகுசு கார்கள் இந்த ஆண்டுகளில் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, 2020-21 ஆம் ஆண்டில் கார் விற்பனை மிகப் பெரிய அளவில் சரிவைக் காண இதுவே காரணமாக உள்ளது. இதற்கு முன்னதாக 2019-2020 ஆம் நிதியாண்டில் 4,187 யூனிட்டுகள் ஆடம்பர வகை கார்கள் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் இப்போது மிகப் பெரிய வளர்ச்சியை தமிழகத்தில் லக்சூரி கார்கள் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் ஆடி போன்ற நிறுவனங்களின் விலை உயர்ந்த சொகுசு கார்களும் தமிழகத்தில் அதிகளவில் விற்பனையாகி இருக்கின்றன. அதேநேரத்தில், சென்ற நிதியாண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் லேசான விற்பனை சரிவைச் சந்தித்து இருக்கின்றன. ஆகையால், அது இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

அதேநேரத்தில், பிஎம்டபிள்யூ சொகுசு கார்களின் விற்பனை மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கின்றது. இந்த அளவிற்கே தமிழகத்தில் சொகுசு கார்களின் விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது. தமிழகத்தில் சொகுசு கார் விற்பனையில் முதல் இடத்தில் பிஎம்டபிள்யூ-வே இருக்கின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகள் 2023-24 ஆம் நிதியாண்டில் 1,192 யூனிட்டுகள் வரை விற்பனையாகி உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் சொகுசு கார்கள் 1,122 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார் மாடல்கள் உள்ளன. இந்த நிறுவனம் 217 யூனிட்டுகள் ஆடம்பர வகை கார்களை விற்பனைச் செய்திருக்கின்றன.

இதற்கு அடுத்த இடத்தில் 84 யூனிட்டுகளுடன் போர்ஷே-வும், 77 யூனிட்டுகளுடன் ஆடி நிறுவனங்களும் இருக்கின்றன. இதேபோல், அல்ட்ரா லக்சூரி கார் மாடல்களான ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் 4 யூனிட்டுகளும், ஃபெர்ராரி கார் ஒன்றும், ஆஸ்டன் மார்டின் கார் ஒன்றும் விற்பனையாகி இருக்கின்றன.

இதுபோக 3 மசராட்டி கார்கள், 7 பென்ட்லீ கார்களும் தமிழகத்தில் விற்பனையாகி இருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த விற்பனையில் தமிழகத்தில் சென்னையே முதல் இடத்தில் இருக்கின்றது. ஆமாங்க, சென்னையில் வசிக்கும் பணக்காரர்களே மிக மிக அதிக எண்ணிக்கையில் லக்சூரி கார்களை வாங்கி இருக்கின்றனர்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த லக்சூரி கார்கள் பதிவில் 1,668 யூனிட்டுகள் சென்னையில் செய்யப்பட்டவை ஆகும். இதற்கு அடுத்தபடியாக கோவை உள்ளது. 510 யூனிட்டுகள் சொகுசு கார்களே இங்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து 110 யூனிட்டுகளுடன் மதுரையும், 95 யூனிட்டுகள் திருநெல்வேலியிலும் மற்றும் திருச்சியில் 65 யூனிட்டுகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடம்பர கார்களின் விற்பனை வளர்ச்சி விகிதம், வழக்கமான கார்களை விட அதி வேகமாக இருப்பதும் இந்த புள்ளி விபரங்கள் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது. இதையே சில மூத்த ஆட்டோத்துறை வல்லுநர்கள் உறுதி செய்திருக்கின்றனர். எனவே, வரும் நாட்களில் தமிழகத்தில் சொகுசு கார்களின் எண்ணிக்கை மிகப் பெரிய வளர்ந்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2024, 11:17 [IST]
English summary
Tamil nadu sees surge in luxury car registrations
மேலும்... #auto news #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+