மோடியே செய்ய முடியாததை அசால்டா செய்த முதல்வர் ஸ்டாலின்! 2 நாளில் வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னையில் இழுத்து மூடப்பட்ட ஃபோர்டு ஆலையில் மீண்டும் வாகன தயாரிப்பை துவங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து இந்த நிறுவனம் வெளியேறி விட்டாலும், இந்தியாவில் வாகனங்களை தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தற்போது முடிவு செய்துள்ளது. இந்த முடிவு முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை நேரில் சந்தித்த பிறகு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஃபோர்ட் நிறுவனம், உலக தரத்தில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் உலக முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் வாகனங்களை விற்பனை செய்து வந்தது. கடந்த 2021ம் ஆண்டு தனது வாகன விற்பனையை அதிகரிக்க முடியாத காரணத்தாலும் மற்ற பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட்டதாலும், இந்நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் ஃபோர்டு ஆலை தொடர்ந்து வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு இதுவும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. முற்றிலுமாக சென்னையில் செயல்பட்டு வந்த ஃபோர்டு நிறுவனத்தின் ஆலை செயல்படாமல் இழுத்து மூடப்பட்டது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் தனது ஆலைகளை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது குஜராத்தில் நிறுவனம் நடத்தி வந்த ஆலையை டாடா நிறுவனம் பெற்று அங்கு வாகனங்களை தயாரித்து வருகிறது.
இதற்கிடையில் சென்னையில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையையும் வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டு வந்தது. ஜேஎஸ்டபிள்யூ என்ற நிறுவனம் சமீபத்தில் இது குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை கூட நடத்தியது. ஆனால் இறுதியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்பதால் இதுவும் கையை விட்டுப் போனது. இதற்கிடையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் தனது காலடி தடத்தை எடுத்து வைக்கும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருந்தது.

தற்போது இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாக வளர்ந்துள்ள நிலையில், ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தனது காலடித்தடத்தை பதித்து ஏற்கனவே அந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி தொடங்கும் தனது வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான முதலீடுகளை தமிழ்நாட்டில் இருப்பதற்காக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அமெரிக்காவில் அவர் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார். அப்பொழுது ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் உள்ள ஆலையை செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் தற்போது தமிழகத்தில் உள்ள ஆலையை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் இந்தியாவில் தனது தொழிலை துவங்காவிட்டாலும், இந்தியாவில் தமிழகத்தில் உள்ள ஆலையில் வைத்து வாகனங்களை தயாரித்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறும் போது பல்வேறு தரப்பினர் நிறுவனம் வெளியேறக்கூடாது என பல்வேறு விதமான கோரிக்கைகளை வைத்து பார்த்தார்கள். ஃபோர்டு நிறுவனம் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு விதமான லாபங்கள் இருந்து வந்தது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தக்க வைக்க பல்வேறு விதமான முயற்சிகள் எடுத்தும் இது பலனளிக்காமல் போனது.
ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று பேசியதும் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவை விட்டு வெளியேறிய ஒரு பெரிய நிறுவனம் மீண்டும் இந்தியாவில் வந்து தனது ஆலையை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. விரைவில் எப்பொழுது இந்த ஆலையில் துவங்கும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் தனது ஆலையில் வாகனங்களை தயாரித்து சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்படும் இது இந்தியாவிற்கே மிகப்பெரிய அளவு வளர்ச்சியை ஏற்படுத்திதரும் என்பது எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. இந்த முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது தான்.


Click it and Unblock the Notifications









