அரபு நாடுகளை ஆட்டம் காண வைக்கும் இந்தியா! இதுக்காக டாடா இப்படி ஒரு வேலையை செஞ்சுகிட்டு இருக்கா! சாரே கொல மாஸ்!
இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. பெட்ரோல், டீசல் இறக்குமதிக்காக மிகப்பெரிய தொகையை செலவிட வேண்டியிருப்பதுதான் இதற்கு காரணம். பெட்ரோல், டீசல் இறக்குமதிக்காக பல லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுவதால், இந்தியாவின் பொருளாதாரத்தில் (Economy) எதிர்மறையான தாக்கங்கள் நிகழ்கின்றன. இதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. கூடவே பெட்ரோல், டீசல் வாகனங்களால் நிகழும், சுற்றுச்சூழல் மாசுபாடு (Environmental Pollution) பிரச்னையை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு ஆசைப்படுகிறது.
இந்த 2 பிரச்னைகளுக்கும், எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) ஒரே தீர்வாக இருக்கும் என்பது மத்திய அரசின் எண்ணம். எனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு சலுகைகளை வழங்குவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்தான் மிக முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல.
தற்போதைய நிலையில் இந்திய சந்தையின் நம்பர்-1 எலெக்ட்ரிக் கார் நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் தன்வசம் வைத்துள்ளது. எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் புதிய உச்சங்களை தொட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மிக பிரம்மாண்டமான மைல்கல் ஒன்றை கடந்துள்ளது.

இந்தியாவில் 1.50 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல். அதாவது இந்திய சாலைகளில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 1.50 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் ஓடி கொண்டுள்ளன என்பதுதான் இதற்கான அர்த்தம் ஆகும். உண்மையிலேயே இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
ஏனெனில் இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ள மாருதி சுஸுகி (Maruti Suzuki) உள்பட பல்வேறு நிறுவனங்கள் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனமோ அதற்குள்ளாக 1.50 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து விட்டது.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மற்ற நிறுவனங்களை காட்டிலும் பல படி முன்னோக்கி சென்று விட்டது. எனவே எதிர்காலத்திலும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கைதான் ஓங்கியிருக்கும் என கருதப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 4 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) ஆகியவை ஆகும்.
இவை அனைத்துமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில், டாடா நெக்ஸான் இவி மற்றும் டாடா பன்ச் இவி ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களும், வெகு சமீபத்தில், பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதன் மூலம், பெட்ரோல், டீசல் இறக்குமதியை குறைக்கும் விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஒரு வகையில் இந்தியாவிற்கு தனது பங்களிப்பை வழங்குகிறது. அத்துடன் இந்தியாவின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உதவி செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








