ரோடு ஃபுல்லா இனி இந்த டாடா கார் தான் போக போகுது!! புதுசா நிறைய டெக்னாலஜி அறிமுகம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அல்ட்ராஸ் ரேஸர் (Altroz Racer) கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது தான் தற்போது இந்தியா முழுவதும் பேச்சாக உள்ளது. ரூ.9.49 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரை புக் செய்வதற்கான முன்தொகை ரூ.21,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வழக்கமான அல்ட்ராஸ் காரிலும் புதியதாக 2 வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டாடா அல்ட்ராஸில் புதியதாக என்னென்ன வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதையும், அவற்றின் விலைகள் மற்றும் சிறப்பம்சங்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்று டாடா அல்ட்ராஸ் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ போன்ற மார்க்கெட்டில் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக விளங்கும் அல்ட்ராஸை ஆற்றல்மிக்க வெர்சனில் அறிமுகம் செய்ய கடந்த 1 வருடத்திற்கும் மேலாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுவந்தது. இதன்படி, அல்ட்ராஸ் ரேஸர் கார் கடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

இதனால், கூடிய விரைவில் டாடா அல்ட்ராஸ் ரேஸர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 1.5 வருடத்திற்கு பிறகு இன்று (ஜூன் 7) இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் ரேஸர் காருடன், அல்ட்ராஸ் காரில் புதியதாக 2 வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்.இசட் லக்ஸ் (XZ LUX) மற்றும் எக்ஸ்.இசட்+ எஸ் லக்ஸ் (XZ+ S LUX) என்பன அந்த 2 வேரியண்ட்கள் ஆகும்.
இதில், அல்ட்ராஸ் எக்ஸ்.இசட் லக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் காரில் பெரிய அளவில் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் (புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன்), 360-டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்டவற்றை பெறலாம்.

அல்ட்ராஸின் மற்றொரு புதிய வேரியண்ட்டான எக்ஸ்.இசட்+ எஸ் லக்ஸ் -இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட எக்ஸ்.இசட் லக்ஸ் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் இந்த வேரியண்ட்டிலும் பெறலாம். கூடுதலாக 4 ஏர்பேக்குகள் கிடைக்கும். இதற்காக தான் கூடுதலாக அந்த ரூ.65,000 ஆகும்.
இந்த விலைகள் அனைத்தும் பெட்ரோல் என்ஜின் & மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் இந்த புதிய வேரியண்ட்களின் விலைகள் ஆகும். அல்ட்ராஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட்கள் பெட்ரோல்-டிசிடி, சிஎன்ஜி-மேனுவல் மற்றும் டீசல்-மேனுவல் ஆப்ஷன்களிலும் கிடைக்கும். அதாவது அதற்கேற்ப விலைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

இந்த இரு புதிய வேரியண்ட்களின் அறிமுகத்துடன், அல்ட்ராஸின் விலைமிக்க எக்ஸ்.இசட்+ ஓ.எஸ் டாப் வேரியண்ட்டிலும் சில வசதிகள் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, டாடா மோட்டார்ஸ் உருவாக்கும் இன்-கார் கனெக்ட்டிவிட்டி டெக்னாலஜி மற்றும் காற்று சுத்திகரிப்பான் அல்ட்ராஸ் எக்ஸ்.இசட்+ ஓ.எஸ் வேரியண்ட்டில் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய வசதிகளுக்கு ஏற்ப அல்ட்ராஸின் இந்த டாப் வேரியண்ட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் எக்ஸ்.இசட்+ ஓ.எஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை முன்பு ரூ.9.65 லட்சமாக இருந்தது. தற்போது அது ரூ.34,000 அதிகரிக்கப்பட்டு ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா அல்ட்ராஸ் ரேஸர் காரின் அறிமுகத்தால், அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே நாளில் அல்ட்ராஸ் காரின் பலத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நன்கு வலுப்படுத்தி உள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 2 வேரியண்ட்களை டர்போ என்ஜின் உடன் வாங்க முடியாது என்றாலும், இந்த வேரியண்ட்களின் அறிமுகத்தால், டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை அதிகரிக்கும் என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications









