ஹூண்டாய்க்கு சங்கு ஊத போகும் டாடா கார் இவ்ளோ கம்மியான விலையில் வருதா! கச்சேரிக்கு இன்னும் 1 நாள்தான் இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இதன் செயல்திறன் மிக்க புதிய வெர்ஷன், டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆம், டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடல் வரும் ஜூன் 7ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த புதிய மாடல் தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஷோரூம்களுக்கு வர தொடங்கியுள்ளது.

எனவே விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே, டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலுக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tata Altroz Racer

டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடல் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை அவென்யூ ஒயிட், அட்டாமிக் ஆரஞ்ச் மற்றும் ப்யூர் க்ரே ஆகியவை ஆகும். கலர் ஆப்ஷன்களை போல், வேரியண்ட்களின் எண்ணிக்கையும் மூன்றுதான். அவை R1, R2 மற்றும் R3 ஆகியவை ஆகும்.

டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலின் வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவை மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Altroz Racer Side Design

இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளும் டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலில் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சன்ரூஃப் வசதியையும் நாம் எதிர்பார்க்கலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொடுக்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) மாடலுக்கு நேரடி போட்டியாக, டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடல் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது. ஹூண்டாய் ஐ20 என் லைன் உடன் ஒப்பிடும்போது, டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலின் விலை சுமார் 1 லட்ச ரூபாய் குறைவாக இருக்கலாம்.

இது உண்மையாக நடக்கும்பட்சத்தில், டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடல், ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கு கடுமையான சவாலை அளித்து, அதிக எண்ணிக்கையில் விற்பனையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரேசர் மாடலின் வருகைக்கு பின்னர், டாடா அல்ட்ராஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயரலாம் எனவும் நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 5, 2024, 23:47 [IST]
English summary
Tata altroz racer arrives at dealerships delivery soon
மேலும்... #Tata Altroz Racer #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+