இந்த காரில் ஆட்டோ கியர் ஆப்ஷன் வருதா? இதுக்காக தான் ஏகப்பட்ட பேர் வெயிட்டிங்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது அல்ட்ராஸ் காரின் ரேஸர் எடிஷனை விற்பனைக்காக அறிமுகப்படுத்திய நிலையில், இந்த காரில் மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்த காரின் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் வெர்ஷனையும் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பின்னர் எப்படி இது சாத்தியம் என்ற விபரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.

வாடிக்கையாளர்களுக்காக தனது அல்ட்ராஸ் காரின் ரேஸர் எடிசனை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் அறிமுகமானது முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏகப்பட்ட பேர் இந்த காரை புக் செய்து வருகிறார்கள். இந்த கார் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. பவர்ஃபுல் பெர்ஃபார்மென்ஸ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல தயாரிப்பாக இருக்கிறது.

tata altroz racer automatic gear option

இந்த டாடா அல்ட்ராஸ் ரேஸர் எடிசன் காரில் தற்போது ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இதுவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின் படி விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரில் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் ஊடகத்திடம் பேசும்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட அல்ட்ராஸ் ரேஸர் காரை வெளியிடும் திட்டம் இருப்பதாக கூறினார்.

tata altroz racer automatic gear option

ஆனால் இது எல்லாம் டாடா அல்ட்ராஸ் ரேஸர் எடிசன் காரின் மேனுவல் கியர் ஆப்ஷனின் விற்பனையை பொருத்தும் வாடிக்கையாளர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பை பொருத்தும் அமையும் என்று அவர் கூறியதாக தற்போது பேச்சு நிலவுகிறது. இதன்படி பார்க்கும்போது இந்த காருக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருப்பதால் விரைவில் இதன் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

டாடா அல்ட்ராஸ் ரேஸர் காரை பொறுத்தவரை தற்போது இந்திய மார்க்கெட்டில் ரூ 9.5 லட்சம் என்ற விலையில் ஆரம்பமாகி டாப் மாடல் கார் ரூ11 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் புக்கிங் துவங்கப்பட்ட உடனேயே ஏகப்பட்ட பேர் இந்த காரை புக்கிங் செய்ய துவங்கி விட்டார்கள்.

tata altroz racer automatic gear option

பெர்ஃபார்மென்ஸ் திறன் கொண்ட அல்ட்ராஸ் காராக இந்த ரேஸர் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள நிலையில் இந்த காரின் உட்புறத்திலும் ஏகப்பட்ட அம்சங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இதில் 10.25 இன்ச் கொண்ட ப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடைமெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒயர்லெஸ் கார் கனெக்ட் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காரில் 10.16 இன்ச் கொண்ட முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் ஏகப்பட்ட அம்சங்கள் சிறப்பாக வழங்கப்பட்டு பல்வேறு தகவல்கள் இடம்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பு அம்சமே இதன் இன்ஜின் தான் சாதாரண அல்ட்ராஸ் காரில் உள்ள இன்ஜினுக்கு பதிலாக இதில் அதிக பவர்ஃபுல்லான இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.2 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 118 பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் நெக்ஸான் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் தற்போது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா அல்ட்ராஸ் கார் ரேஸர் எடிசனை விரும்பும் மக்கள் பலர் மேனுவல் கியர் ஆப்ஜனை தான் விரும்புவார்கள். பெரும்பாலும் பவர்ஃபுல்லான பெர்ஃபார்மென்ஸையும் விரும்புவோருக்கு மேனுவல் கியர் ஆப்ஷன் சிறப்பாக இருக்கும் இருந்தாலும், ஒரு சில வாடிக்கையாளர்கள் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை விரும்புவதால் டாடா நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 17, 2024, 7:01 [IST]
English summary
Tata altroz racer automatic gear option 7 speed dual clutch details
மேலும்... #Tata Altroz Racer #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X