வேகமாக போறதுல சாதனை படைத்த டாடா கார்.. ஐ10 என் லைன் காராலேயே இத அடிச்சுக்க முடியலையாம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), அதன் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான அல்ட்ராஸ் (Altorz)-இல் ரேசர் (Racer) எனும் சூப்பரான பதிப்பை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது சந்தையில் டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கம். ஹூண்டாய் ஐ10 என் லைன் கார் மாடலுக்கு போட்டியாக கொண்டு வரப்பட்ட ஓர் பதிப்பே இதுவாகும். வழக்கமான டாடா அல்ட்ராஸ் மாடலைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய தயாரிப்பாக இதனை டாடா மோட்டார்ஸ் தயார் செய்திருக்கின்றது.
இந்த கார் மாடலே தற்போது தரமான விருது ஒன்றை வென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த ஹேட்ச்பேக் கார், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-இல் 'வேகமான இந்திய ஹேட்ச்பேக்' என்கிற விருதையே வென்றிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ்க்கு புகழ் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.

இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் வாயிலாகவே இந்த சாதனைப் படைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் சிறப்பாக, கோயம்புத்தூரில் உள்ள கோஸ்ட் ரேசிங் டிராக் (CoASTT Racing Track)லேயே அவர் இந்த சாதனையை படைத்தார். டாடா மோட்டார்ஸ்-இன் தயாரிப்புகள் தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பது முதல் முறையல்ல.
அதன் கார்கள் பெரும்பாலும் தரத்திற்கும், பாதுகாப்பிற்குமே பெயர்போனதாக உள்ளது. இதேபோல், கார்களில் புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்துவதிலும் டாடா முன்னணியில் உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது அதீத திறனை வெளிப்படுத்தும் காரை உருவாக்குவதிலும் கை தேர்ந்த நிறுவனம் என்பதை டாடா மோட்டார்ஸ் வெளிக்காட்டி இருக்கின்றது.
டாடா அல்ட்ராஸ் ரேசர் வென்டிலேட்டட் வசதிக் கொண்ட இருக்கையுடன் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் இந்திய ஹேட்ச்பேக் கார் மாடல் ஆகும். இதுதவிர, 360 பார்வை திறன் கொண்ட கேமிராவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தயைும் கொண்ட முதல் ஹேட்ச்பேக் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையும் இந்த ஹேட்ச்பேக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இப்போது அது படைத்திருக்கும் சாதனையானது மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. கோஸ்ட் ரேசிங் ட்ராக்கில் டாடா அல்ட்ராஸ் ரேசர், ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் டர்போ (Maruti Suzuki Fronx Turbo) ஆகியவற்றிற்கு இடையேயே டைம் அட்டாக் போட்டி நடைபெற்றது.
ஜூன் 5, 2024 அன்று நடைபெற்ற போட்டியில் அல்ட்ராஸ் ரேசர் 2 நிமிடம் மற்றும் 21.74 வினாடிகளில் மிக வேகமான லேப் டைம் (lap time)-ஐ எட்டியது. இதைத்தொடர்ந்து, அந்த காருக்கு இந்தியாவின் அதி வேக ஹேட்ச்பேக் என்கிற பட்டம் வழங்கப்பட்டது.
இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் தலைமை ஆசிரியர் டாக்டர் பிஸ்வரூப் ராய் சௌத்ரி அந்த விருதை 12 ஜூன் 2024 அன்று வழங்கினார். வழக்கமான அல்ட்ராஸ் உடன் ஒப்பிடும்போது, அல்ட்ராஸ் ரேசர் பதிப்பில் ஐ-டர்போ பிளஸ் (i-Turbo+) மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸே இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த காம்பினேஷனால் அதன் அதிகபட்ச திறன் வெளிப்பாடு 120 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க்காக உள்ளது. இத்தகைய சூப்பரான திறனை வெளியேற்றியதன் காரணத்தினாலேயே அக்காருக்கு தற்போது இந்தியாவின் சிறந்த விருதுகளில் ஒன்று வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த காருக்கு ஸ்போர்ட்டி திறனை வழங்கியதோடு, அதற்கு ஸ்போர்ட்ஸ் காரை போன்ற லுக்கையும் வழங்கி இருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே காரின் முன் பக்கம் தொடங்கி பின் பக்கம் வரையில் நீளும் வகையில் இரட்டை வெள்ளை பட்டைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ரேஸ் கார்களுக்கு இணையான சில ட்யூனிங் செய்யப்பட்ட கருவிகளையும் இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ட்யூனிங் கம்ப்ரஷன் மற்றும் ரீபௌண்ட் மூலம் காரின் சஸ்பென்ஷனை டாடா சரிசெய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் ஐ10 என் லைன்-க்கு மிகப் பெரிய அளவில் டாடாவின் இந்த தயாரிப்பு மிகப் பெரிய அளவில் சவால் விடும் என்பது தற்போதைய சான்றளிப்பின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. டாடா அல்ட்ராஸ் ரேசர் பதிப்பு ஹூண்டாய் ஐ10 என் லைன் மற்றும் பிற போட்டி கார் மாடல்களுக்கு மிகப் பெரிய அளவில் போட்டியாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









