மாருதி, ஹூண்டாய் எல்லாம் கதறப்போறாங்க! சூப்பரான காரை அறிமுகப்படுத்திய டாடா!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று தனது அல்ட்ராஸ் காரின் ரேஸர் எடிசனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் ஏற்கனவே வெளியாகி வந்த டர்போ வேரியன்ட் பதிலாக இந்த ரேஸர் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகமாகியுள்ளது. இப்படியாக இந்த காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? இதன் விலை என்ன? எத்தனை வேரியன்டகள் உள்ளது? உள்ளிட்ட விரிவான அனைத்து விபரங்களையும் இங்கே காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காராகும். இந்த கார் நீண்ட நாட்களாக இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் காரின் ரேஸர் எடிசன் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தது. ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங்கை தனது டீலர்ஷிப்களில் துவங்கிவிட்டது. ரூ21,000 முன்பணம் கொடுத்து இந்த காரை புக் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ராஸ் ரேஸர் எடிசன் காரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையாகி வரும் டாடா அல்ட்ராஸ் கார் தற்போது ரூ6.64 லட்சம் முதல் ரூ10.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் டாடா அல்ட்ராஸ் காரின் ரேஸர் எடிசன் கார் தற்போது ரூ9.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காரில் வெளிப்புறத் தோற்றத்திலும் சரி பெர்ஃபார்மென்ஸிலும் சரி பல்வேறு விதமான அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக சாதாரண காருக்கும் இந்த காருக்கும் வேறு வேறு இன்ஜின்கள் பொருத்தப்படுகிறது. இந்த அல்ட்ராஸ் ரேஸர் காரில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இதே இன்ஜின் தான் டாடா நெக்ஸான் காரிலும் பொருத்தப்பட்டு விற்பனையாகி வருகிறது.

இந்த இன்ஜினை பொருத்தவரை 120 பிஎஸ் பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீட் மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட விற்பனைக்கு வருகிறது. அதே போல இந்த ரேஸர் எடிசன் காரில் சஸ்பென்ஷன் சிஸ்டமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் ஹேண்டிலிங் சிறப்பாக இருக்கிறது.
காரில் பிரேக்கிங் சிஸ்டமும் அப்டேட் செய்யப்பட்டு சிறப்பான பிரேக்கிங் அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள விசுவல் அப்டேட்களை பொறுத்தவரை இந்த காருக்கு வரும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் கல்லறை பொருத்தவரை டூயல் டோனில் வழங்கப்பட்டுள்ளது. பானட், டெயில் மற்றும் ரூஃப் பகுதியில் கருப்பு நிறம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த காரை தேர்வு செய்யும் போது மூன்று விதமான டூயல் டோன் ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ள முடியும். அட்டாமிக் ஆரஞ்சு, அவன்யூ ஒயிட், பியூர் கிரே ஆகிய ஆப்ஷன்களை தேர்வு செய்து டூயல் டோனாக இந்த காரை பெற்றுக் கொள்ள முடியும். இந்த காரின் ஃபென்டர் பகுதியில் ரேஸர் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காருக்கு புதிதாக அலாய் வீல்கள் ஸ்போர்ட்டி லுக்குடன் இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை கருப்பு நிறத்தையும் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே ஆரஞ்ச் நிற ஆக்ஸென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு நிற கொண்டு இதன் சீட்டுகள் எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கான்ட்ராஸ்ட் நிறத்தில் இதன் தையல்கள் இரண்டு ஸ்டிரிப்களாக வழங்கப்பட்டுள்ளன. இது காரின் உள்ளே ஸ்போர்ட்டியான லுக்கை தருகிறது.
இந்த காரின் டேஷ்போர்டுகளை பொறுத்தவரை சாதாரண அல்ட்ராஸ் காரில் இருக்கும் அதே டேஷ்போர்ட்டில் விட்டு தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில பிரிமியமான ஆப்ஷன்கள் உள்ளன. முக்கியமாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இருக்கிறது. இதுபோக முன் பக்க சீட்டுகள் வென்டிலேட்டட் சீட்களாக வழங்கப்பட்டுள்ளன. இதுபோக க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் எலெக்ட்ரானிக் சன்ரூஃப் ஆகியன இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.
டாடா ஆல்ட்ராஸ் ரேஸர் காரை பொருத்தவரை ஆர்1, ஆர்2, ஆர்3 ஆகிய 3 வேரியன்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இதில் ஆர்1 வேரியன்ட் கார் ரூ9.49 லட்சம் என்ற விலையிலும், ஆர்2 காரை பொருத்தவரை ரூ10.49 லட்சம் என்ற விலையிலும், ஆர்3 காரை பொருத்தவரை ரூ10.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலை எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலை தான்.
இது போக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆல்ட்ராஸ் காரில் 2 புதிய வேரியன்ட்களாக எக்ஸ் இசட் லக்ஸ், மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் எஸ் லக்ஸ் ஆகிய வேரியன்ட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முறையே ரூ8.99 லட்சம் மற்றும் ரூ9.64 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போக ஏற்கனவே விற்பனையாகி வரும் எக்ஸ்இசட் பிளஸ் ஓஎஸ் வேரியன்டை அப்டேட் செய்து ரூ9.98 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது.
டாடா அல்ட்ராஸ் ரேஸர் காரை பொறுத்தவரை மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஹூண்டாய் ஐ20 என்-லைன் காருக்கு போட்டியாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த செக்மெண்டில் விற்பனையான ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் மாருதி சுஸூகி பலேனோ ஆர்எஸ் ஆகிய கார்கள் எல்லாம் தற்போது விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக இந்த ரேஸர் கார் செக்மெண்டில் சிறப்பான விற்பனையை பெற வாய்ப்புள்ளது.
டர்போ சார்ஜர் ஆப்ஷன் என்று பார்க்கும்போது வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸூகி ஃபிராங்க்ஸ் காரும் ஒரு டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரும் ஒரு ஆப்ஷனாக இருக்கிறது. இரண்டு காரில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் விற்பனை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ராஸ் காரை அப்டேட் செய்யும் வகையில் இந்த புதிய ரேஸர் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக பெர்ஃபார்மென்ஸ் விரும்பும் மக்களுக்கு இந்த ரேஸர் எடிசன் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இதற்காக அந்நிறுவனம் டர்போ கார்களை முற்றிலுமாக நிறுத்திவிட்டு இந்த ரேஸர் எடிசனை கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









