ஸ்போர்ட்ஸ் கார்களையே தோற்கடிச்சிரும் போல.. ஷோரூமில் கெத்தாக காட்சியளிக்கும் விலை குறைவான டாடா அல்ட்ராஸ் ரேசர்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் மாடல்களில் அல்ட்ராஸ் (Altroz)-ம் ஒன்று. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் ரக காராகும். பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் மாடல் கெட்டிக்காரன் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் குவித்திருக்கின்றது. இந்த கார் மாடலுக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அல்ட்ராஸ் ரேசர் (Altroz Racer) எனும் சூப்பரான பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இந்த பதிப்பே கெத்தாக ஷோரூம்கள் காட்சியளிக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. இதன் வாயிலாக ஷோரூம்களுக்கு அல்ட்ராஸ் ரேசர் வர தொடங்கி இருப்பது உறுதியாகி இருக்கின்றது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு இந்த கார் மாடல் ஷோரூம் முன்பாகவே நிறுத்தப்பட்டு இருக்கின்றது. வழக்கமான அல்ட்ராஸைக் காட்டிலும் இது சற்று அதிக கவர்ச்சியானதாகவே காட்சியளிக்கின்றது.

தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி அல்ட்ராஸ் ரேசர் பதிப்பின் ஆரம்ப நிலை தேர்வுகளே ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. 'அதுவேவா இவ்வளவு அழகா இருக்கு' என்று நம்மை மிரள செய்கின்றது தற்போது வெளியாகி இருக்கும் அல்ட்ராஸ் ரேசர் ஆர்1 வேரியண்டின் படங்கள்.
ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) கார் மாடலுக்கு போட்டியாகவே இந்த கார் மாடலை டாடா இந்தியா கொண்டு வந்திருக்கின்றது. இது ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் ஆர்1 (R1), ஆர்2 (R2) மற்றும் ஆர்3 (R3) ஆகியவையே அவை ஆகும்.

தற்போது தரிசனத்தை வழங்கி இருப்பது ஆர்1 வேரியண்டே ஆகும். இதன் விலை ரூ. 9.49 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலைக்கே ஏகப்பட்ட சிறப்பம்சங்களை டாடா நிறுவனம் அல்ட்ராஸ் ரேசர் ஆர்1 வேரியண்டில் வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கும். இதுதவிர லெதரால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள், எட்டு ஸ்பீக்கர்கள், வாஷருடன் கூடிய பின்புற வைப்பர், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் க்ரூஸ் கனட்ரோல் ஆகியவற்றையும் அது கொண்டிருக்கும்.
இத்துடன் பாதுகாப்பு அம்சங்களாக ஆர்1 வேரியண்டில் ஆறு ஏர் பேக்குகள், முன்பக்கத்தில் பனி மின் விளக்குகள், மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப், உயரத்தை சரி செய்யக்கூடிய டிரைவர் இருக்கை மற்றும் நான்கு கதவுகளுக்கும் பவர் ஜன்னல்கள் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.
ஆரம்ப நிலை தேர்வாக இருந்தாலும் இதுபோன்று ஏகப்பட்ட வசதிகளை ஆர்1 வேரியண்டில் டாடா வாரி வழங்கி இருக்கின்றது. ஆகையால், அத்தியாவசிய தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிரம்பிய தேர்வாக அல்ட்ராஸ் ரேசர் ஆர்1 காட்சியளிக்கின்றது. இதைபோலே மிக அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியதாக அல்ட்ராஸ் ரேசர்-இன் மற்று வேரியண்டுகளும் உள்ளன.
சொல்லப்போனால் இதைவிட அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாக அவை இருக்கும். அந்தவகையில், உயர் நிலை தேர்வுகளில் ஆர்1 வேரியண்டில் இடம் பெற்றிருப்பதைவிட சற்று பெரிய திரை, வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், காற்றை தூய்மையாக்கும் கருவி மற்றும் காற்றோட்டத்தை உறுதிச் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் அவற்றில் இடம் பெற்றிருக்கும்.
இதுபோன்று சிறப்பம்சங்களில் மட்டுமே அல்ட்ராஸ் ரேசரின் வேரியண்டுகள் மாறுபட்டுக் காட்சியளிக்கும். எஞ்சின் விஷயத்தில் அனைத்தும் ஒரே மாதிரியானதாகவே காட்சியளிக்கும். அந்தவகையில், 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினே அனைத்து தேர்வுகளிலும் இடம் பெற்றிருக்கும். இந்த மோட்டாருடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸே இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும். தொடர்ந்து, இந்த கார் வெறும் 11.3 வினாடிகளிலேயே பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய சூப்பரான காராகவே அல்ட்ராஸ் ரேசர் பதிப்பை டாடா மோட்டார்ஸ் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஷோரூம்களுக்கு அல்ட்ராஸ் ரேசர் பதிப்பை அனுப்பி வைத்துக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து விரைவில் இந்த கார் மாடலின் டெலிவரி பணிகளையும் டாடா மோட்டார்ஸ் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அல்ட்ராஸ்-க்கு பிரீமியம் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பான பயணத்தை விரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதே வரவேற்பையே இந்த கார் மாடலும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








