டாடாவின் புது காருக்கு இவ்வளவு போட்டியா? இந்த 3 கார்ல எதை வாங்கலாம் நீங்களே சொல்லுங்க!
அல்ட்ராஸ் ரேஸர் காருடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சந்தையில் மீண்டும் பவர்ஃபுல் ஹேட்ச் பேக் கார் செக்மெண்டில் நுழைந்தள்ளது. இந்த கார் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஹூண்டாய் ஐ20 என் லைன் மற்றும் மாருதி ஃபிராங்க்ஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது, இந்த கார்கள் ஸ்போர்ட்டியர் டிசைன்கள் மற்றும் மேம்பட்ட அம்சங்கள் இடம் பெற்றள்ளன. இந்த பதிவில் நாம் இந்த மூன்று மாடல் கார்களையும் ஒப்பிட்டு ஒவ்வொரு காரிலும் உள்ள அம்சங்கள், இன்ஜின், விலை உள்ளிட்ட விரிவான விபரங்களை காண்ப்போகிறோம்.
இந்த மூன்று கார்களும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. ஆல்ட்ராஸ் ரேஸர் அதன் டூயல் டோல் கலர் பிளான், ஹூட் கோடுகள் மற்றும் கருப்பாக இருக்கும் மேல்-பாதி அம்சங்களுடன் தனித்து நிற்கிறது. இந்த காரின் வருகைக்காக பலர் காத்திருந்தார்கள். அல்ட்ராஸ் காரின் டர்போ வேரியன்டிற்கு பதிலாக இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

ஹூண்டாய் ஐ20 என் லைன், கார் மக்களால் ஈர்க்கப்படும் டிசைன் அம்சங்கள் மற்றும் ஸ்போர்ட்டியான எக்ஸாஸ்ட்களுடன் ஒட்டு மொத்த காரும் ஸ்போர்ட்டியான தோற்றத்தையும் கொண்டுள்ளது. மாருதி ஃபிராங்க்ஸ் காரை பொருத்தவரை , கூபே-ஸ்டைல் எஸ்யூவி காராகும், மேலும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் ஐ 20 என் லைன் மற்றும் அல்ட்ராஸ் ரேஸ் ஆகிய கார்களின் உட்புறங்கள் ஸ்போர்டியான லுக்கில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் கான்ட்ராஸ்ட் தையல் மற்றும் கருப்பு தீம் உள்ளது. ஐ20 என் லைன் காரில் மெட்டல் பெடல்கள் மற்றும் ஸ்போர்ட்டியர் ஸ்டீயரிங் வீல் ஆகியவை உள்ளன.

அல்டராஸ் ரேஸர் காரில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. 360-டிகிரி கேமரா, வென்டிலேட்டட் சீட்கள், வாய்ஸ் கண்ட்ரோல் சன்ரூஃப் மற்றும் பிரீமியம் ஆடியோ அம்சங்கள் ஆகியவற்றை வழங்குகிறது. ஐ20 என்-லைன் காரில் எலெக்ட்ரானிக் சன்ரூஃப் மற்றும் போஸ் ஆடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.
ஃபிராங்க்ஸ் காரில் 9-இன்ச் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் உள்ளது, ஆனால் ஸ்போர்ட்டி பெடல்கள் அல்லது சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் இல்லை. ஐ20 என் லைன் மற்றும் அல்ட்ரோஸ் ரேஸர் காரில் தரமான 6 ஏர்பேக்குகள் உட்பட மூன்று மாடல்களும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வருகின்றன.

அல்ட்ராஸ் ரேஸர் காரில் 120bhp மற்றும் 170Nm உடன் 1.2லி டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் பொருத்தப்பட்டுள்ளது., இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கிறது. ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் 120hp மற்றும் 172Nm உடன் 1.0L டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது பெடல் ஸ்விஃப்டர்களுடன் மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆகிய 2 கியர் பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை பொருத்தவரை 100 bhp மற்றும் 147Nm உடன் 1.0லி டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் பெடல் ஸ்விஃப்டருடன் கூடிய கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டாடா அல்ட்ராஸ் ரேஸர் காரின் விலையை பொருத்தவரை ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரையிலும். ஹூண்டாய் ஐ20 என் லைன் கார் ரூ.10 லட்சம் முதல் ரூ.11.30 லட்சம் என்ற விலையிலும். மாருதி ஃபிராங்க்ஸ் டர்போ காரின் விலையை பொருத்தவர ரூ.9.7 லட்சம் முதல் ரூ.13 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் அதிக இடவசதி மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றை வழங்கும் அதே வேளையில், டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் ரேஸர் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 என் லைன் ஆகிய கார்கள் அதிக செயல்திறன் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு எது பிராதன தேவை என்பதை உணர்ந்து எந்த காரை வாங்கலாம் என முடிவு செய்யுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மூன்று காரிலும் உள்ள ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பொறுத்தது. அல்ட்ராஸ் ரேஸர் கார் பல அம்சங்களையும் வலிமையான செயல்திறனையும் வழங்குகிறது. அதே நேரத்தில் i20 என்-லைன் காரில் டிசிடி ஆப்ஷனும் உள்ளது. கூடுதல் இடவசதி மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எஸ்யூவியாக ஃப்ராங்க்ஸ் மற்ற இரண்டு காரிலுமிருந்து தனித்து நிற்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









