புதுசா வரப்போற டாடா கார் விலை இவ்ளோதானா! எலக்ஸன் ரிசல்ட்டை மறந்துட்டு எல்லாரும் இத பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer). ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா அல்ட்ராஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனான ரேசர், வரும் ஜூன் 7ம் தேதி (June 7) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள காரணத்தால், டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலுக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலில் ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படவுள்ளது.

அது 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் ஏற்கனவே டாடா நெக்ஸான் (Tata Nexon) காரில் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும்.

Tata Altroz Racer

ஆரம்பத்தில் இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் வேண்டுமானால், ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடல் மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.

அவை R1, R2 மற்றும் R3 ஆகியவை ஆகும். வேரியண்ட்களை போல், இந்த காரின் கலர் ஆப்ஷன்களின் எண்ணிக்கையும் மூன்றுதான். அவை அட்டாமிக் ஆரஞ்ச், அவென்யூ ஒயிட் மற்றும் ப்யூர் க்ரே ஆகியவை ஆகும். டாடா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, அல்ட்ராஸ் ரேசர் மாடலிலும் அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது.

Tata Altroz Racer Front Design

இதில், சிங்கிள்-பேன் சன்ரூஃப், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை மிகவும் முக்கியமான வசதிகளாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

இவை எல்லாம் தவிர, 360 டிகிரி கேமரா, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் போன்ற வசதிகளும், டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலில் வழங்கப்படவுள்ளன. இந்திய சந்தையில் இந்த புதிய மாடலின் ஆரம்ப விலை 9 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளான ஜூன் 7ம் தேதிதான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது நமக்கு தெரியவரும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) மாடலுக்கு நேரடி போட்டியாக, டாடா அல்ட்ராஸ் ரேசர் வரவுள்ளது. தற்போதைய நிலையில் ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலின் ஆரம்ப விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.52 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். எனவே நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலையில் வந்தால், டாடா அல்ட்ராஸ் ரேசர் மூலம் ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படலாம் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, June 3, 2024, 13:51 [IST]
English summary
Tata altroz racer launch date june 7 all you need to know
மேலும்... #Tata Altroz Racer #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+