இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!

டாடா (Tata) நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக அல்ட்ராஸ் (Altroz) இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பிரீமியம் அம்சங்கள் தாங்கிய ஹேட்ச்பேக் ரக கார் மாடல் இதுவாகும். இந்த கார் மாடலின் ரேசர் பதிப்பையே விரைவில் டாடா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த மாசமே அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த தகவல் கார் காதலர்களின் கவனத்தை கூடுதலாகக் கவரும் அமைந்திருக்கின்றது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நிறைய புதிய கார் மாடல்கள் சந்தையைக் களம் காண இருக்கின்றன. அதில் டாடா அல்ட்ராஸ் ரேசர் (Altroz Racer)-ம் ஒன்று என்பது டாடா கார் காதலர்களுக்கே மிகப் பெரிய சந்தோஷத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Tata altroz racer model will be launched in april

இந்த கார் மாடலை டாடா மோட்டார்ஸ் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023-லேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்போதே இந்த கார் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்தே, அல்ட்ராஸ் ரேசர் மாடலை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாகக் களமிறங்கியது.

தற்போது அதன் வருகைக்கான மாதமாக ஏப்ரல் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. வழக்கமான டாடா அல்ட்ராஸ் கார் மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான வெளிப்புறத் தோற்றம் மற்றும் மிக சிறப்பான செயல் திறனை வெளியேற்றக் கூடியதாக இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. அதிக ஸ்போர்ட்டியான தோற்றம், திறன் வெளிப்பாட்டை விரும்புவோரைக் கவரும் பொருட்டே டாடா இந்த கார் மாடலை தயார் செய்திருக்கின்றது.

Tata altroz racer roof

இதன் வருகை நேரடியாக ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. அல்ட்ராஸுக்கு ஸ்போர்ட்டியான தோற்றம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், ரேசிங் ஸ்ட்ரைப்புகள் (கோடுகள்) அந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. காரின் பான்னெட் தொடங்கி மேற்கூரை வரை அந்த கோடுகள் நீளுகின்றன.

இந்த கோடுகளே அல்ட்ராஸ் ரேசர் காருக்கு அதிக முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்குகின்றது. இந்த தோற்றத்திற்கு கூடுதல் பிளஸ்ஸாக அதன் இரண்டு விதமான நிற அலங்கரிப்பு செயல் அமைந்திருக்கன்றது. காரின் மேற்கூரை மற்றும் பான்னெட்டிற்கு கருப்பு நிறமும், பம்பர், பின் பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளுக்கு மாற்று நிறமும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Tata altroz racer roof side vew

காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்பக்கமும் ஸ்போர்ட்ஸ் ஃபீலை வழங்கும் வகையிலேயே இருக்கும் என தெரிகின்றது. இரண்டு விதமான வண்ணத்தாலும், வெளிப்புறத்தைப் போல உட்பக்கத்திலும் ஸ்போர்ட்டியான கோடுகளும் இடம் பெற்றிருக்கும் என தெரிகின்றது. இதில் எஞ்சினைப் பொருத்த வரை இந்த கார் மாடலில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க்கை வெளியேற்றும். ஃபன்னான ரைடு அனுபவத்திற்கு இந்த திறன் வெளிப்பாடு போதுமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இதேபோல், சிறப்பம்சங்கள் விஷத்திலும் அல்ட்ராஸ் ரேசர் மிக சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் பலதரப்பட்ட நவீன கால அம்சங்களை அல்ட்ராஸ் ரேசர் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்தவகையில், 10 அங்குல மிதக்கும் வகை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, ஆறு ஏர் பேக்குகள், ஒயர்லெஸ் சார்ஜர் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. இதுபோன்று இன்னும் பல நவீன கால அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. டாடா அல்ட்ராஸ் ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் என்பதால் அது இந்த விஷயத்தில் மேலும் சிறப்பானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா அல்ட்ராஸ் கார் மாடலுக்கு பிரீமியம் அம்சங்களை அதிகம் விரும்பும் ஹேட்ச்பேக் கார் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும் பாதுகாப்பான பயணத்தை விரும்புவோரின் தேர்வாகவும் இந்த கார் மாடல் இருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே அதிக திறனை விரும்புவோரைக் கவரும் பொருட்டு தற்போது ரேசர் தேர்வை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2024, 22:50 [IST]
English summary
Tata altroz racer model will be launched in april
மேலும்... #Tata Altroz Racer #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X