ஹூண்டாயை சிதைக்க போகும் டாடா காருக்கு புக்கிங் தொடங்கியது... விடிஞ்சதும் அத்தன பேரும் ஷோரூம்லதான் இருப்பாங்க!
இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்த காரின் செயல்திறன் மிக்க புதிய வெர்ஷன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer) என்ற பெயரில், இந்த புதிய வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) மாடலுக்கு போட்டியாக டாடா அல்ட்ராஸ் ரேசர் களமிறங்கவுள்ளது.
இந்திய சந்தையில் நடப்பு ஜூன் மாத இறுதிக்குள்ளாக டாடா அல்ட்ராஸ் ரேசர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலுக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Official Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இது டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலின் வருகைக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாடா அல்ட்ராஸ் ரேசர் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) இந்த கார் கிடைக்கும்.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (Turbo Petrol Engine) ஆப்ஷன் கொடுக்கப்படவுள்ளது. அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் (Gear Box) இணைக்கப்பட்டிருக்கும்.

டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரேசர் மாடலுக்கும் இது பொருந்தும்.
எனவே பாதுகாப்பான, அதே நேரத்தில் செயல்திறன் மிக்க ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் காரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, டாடா அல்ட்ராஸ் ரேசர் மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த ரேசர் மாடலின் வருகைக்கு பின்னர், டாடா அல்ட்ராஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலின் வருகை, ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலின் விற்பனையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ரேசர் மாடலை தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








