ஹூண்டாயை நிலை குலைய வைக்க போகும் டாடா கார்! எழுதி வெச்சுக்கோங்க! மொத்த கூட்டத்தையும் கதற விட போகுது!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த மாத தொடக்கத்தில் (ஜூன்) இந்தியாவில் அல்ட்ராஸ் ரேசர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 மற்றும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா அல்ட்ராஸ் ரேசர், பலரது கவனத்தையும் கவர்ந்தது.
டாடா அல்ட்ராஸ் ரேசர் காரில், 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டிருக்கும். டாடா நெக்ஸான் காரிலும் இதே இன்ஜின் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 120 பிஎஸ் பவரையும், 1,750-4,000 ஆர்பிஎம்மில் 170 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். டாடா அல்ட்ராஸ் ரேசர் காரின் நீளம் 3,990 மிமீ, அகலம் 1,755 மிமீ மற்றும் உயரம் 1,523 மிமீ ஆகவும், வீல்பேஸ் நீளம் 2,501 மிமீ ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் காரானது, குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா அல்ட்ராஸ் ரேசர் காருக்கும் இந்த பாதுகாப்பு ரேட்டிங் பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டாடா அல்ட்ராஸ் ரேசர் காரில், 6 ஏர்பேக்குகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் வழங்கப்படலாம்.

மேலும் 7 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சுறா துடுப்பு ஆண்டெனா, 16 இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் ஆகியவை அம்சங்களையும் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். அத்துடன் ப்ரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், பின்புறத்திலும் ஏசி வென்ட்கள் மற்றும் ரேசர் பேட்ஜிங் ஆகிய அம்சங்களும் இடம்பெறும் என கருதப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலின் வருகைக்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
வழக்கமான டாடா அல்ட்ராஸ் காரானது, மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா மற்றும் ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. ஆனால் டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலானது, ஹூண்டாய் ஐ20 என் மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரின் ரேசர் மாடலை தொடர்ந்து, எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என நாங்கள் கருதுகிறோம். டாடா அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் கார் கடந்த காலங்களில் நடைபெற்ற வாகன திருவிழாக்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அனேகமாக 2025ம் ஆண்டின் ஏதாவது ஒரு சமயத்தில் டாடா அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரேசர் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களின் வருகைக்கு பின், டாடா அல்ட்ராஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








