அல்ட்ராஸ் ரேசர் அறிமுகம் எப்போது? புதிய மாருதி ஸ்விஃப்ட் இப்பதான் அறிமுகமாச்சு அதுக்குள்ள இவ்ளோ பெரிய போட்டியா
இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஒன்றாக டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer) இருக்கின்றது. இந்த கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற விபரமே தற்போது வெளியாகி இருக்கின்றது. இதுபற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் மாடலாக அல்ட்ராஸ் இருக்கின்றது. இந்த காரை அதிக திறனை வெளியேற்றும் கொண்டதாகவே ரேசர் பதிப்பின் வாயிலாக டாடா உருவாக்கி இருக்கின்றது. இதன் வெளியீடு மாதம் பற்றிய தகவலே தற்போது வெளியாகி உள்ளது.

இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, டாடா அல்ட்ராஸ் ரேசர், இந்தியாவில் வருகின்ற ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த காரை டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே வெளியீடு செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் அக்காருக்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
முன்னதாக ஆட்டோ எக்ஸ்போவிலும் (இங்கேயே முதலில் அக்கார் காட்சிப்படுத்தப்பட்டது), இதற்கு அடுத்தபடியாக பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவிலும் ரேசர் எடிசன் காட்சிப்படுத்தப்பட்டது. வழக்கமான அல்ட்ராஸில் இருந்து பல நிலைகளில் இந்த கார் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, பிரத்யேக அலங்கரிப்பு வேலைகளால் இந்த கார் தனித்துவமானதாக மாற்றப்பட்டு இருக்கின்றது.
புதிய டூயல் பெயிண்ட் வேலை, கருப்பு நிற அலாய் வீல், அப்டேட் செய்யப்பட்ட பம்பர் மற்றும் பெரிய ரூஃப் ஸ்பாய்ளர் ஆகியவற்றை அல்ட்ராஸ் ரேசர் பெற்று இருக்கின்றது. வழக்கமான அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் இந்த வசதிகளைப் பார்க்க முடியாது. இந்த மாதிரியான தனித்துவமான வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கார் மாடல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், எதிர்பார்ப்பையும் பெற்றிருக்கின்றது. அல்ட்ராஸ் ரேசர் கார் மாடலின் வெளிப்புறம் மட்டுமல்ல உட்பக்கமும் அதிக கவர்ச்சியானதாக மாற்றப்பட்டு உள்ளது. கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற டேஷ்போர்டால் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது, மனதை திருடும் வகையில் உள்ளது. இத்துடன், இதன் ஸ்டியரிங் வீலுக்கும் ஆரஞ்சு நிற தையல்கள் கொண்ட உரை வாயிலாக அழகுப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
எஞ்சினைப் பொருத்த வரை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் அதிக பவர்ஃபுல்லான எஞ்சின் ஆகும். 120 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க்கை இது வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே இதில் வழங்கப்பட இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, 6 ஸ்பீடு டிசிஏ டிரான்ஸ்மிஷனும் அல்ட்ராஸ் ரேசர் கார் மாடலில் டாடா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாடல் விற்பனைக்கு வரும் எனில் ஹூண்டாய் ஐ20 என் லைன் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் ரேசிங் ரோட்ஸ்டர் போன்ற அதிக திறனை வெளியேற்றும் பதிப்புகளுக்கு இதன் வருகை போட்டியாக அமையும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இப்போது இந்த காரின் வெளியீடு மாதம் பற்றிய தகவலே வெளியாகி இருக்கின்றது. விரைவில் இந்த காரின் துள்ளியமான அறிமுக நாள் பற்றிய விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நாளுக்காகவே டாட கார் பிரியர்கள் தற்போது எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். டாடா கார்கள் அதிக பாதுகாப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களுக்கு பெயர்போனவையாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னணி கார் உற்பத்தியாளர்கள் தங்களின் முக்கிய தயாரிப்புகளில் ஜிடி லைன், என் லைன் என அதிக திறனை வெளியேற்றும் வெர்ஷன்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றனர். இந்த நிலையிலேயே டாடா அல்ட்ராஸ் கார் மாடலில் முதல் முறையாக ரேசர் எனும் அதிக திறனை வெளிப்படுத்தும் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








