வேட்டியை வரிந்து கட்டிய டாடா! இந்தியாவே காத்து கிடக்கும் காருக்கு புக்கிங் தொடங்கியது! ஹூண்டாய் சோலி முடின்ச்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த கார், ஹூண்டாய் ஐ200 (Hyundai i20), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இந்த சூழலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரில் புதிய மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer) என்ற பெயரில், இந்த புதிய மாடல் வரவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா அல்ட்ராஸ் ரேசர், வரும் ஜூன் மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக டாடா அல்ட்ராஸ் ரேசர் காருக்கு தற்போது முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Tata Altroz Racer

ஆனால் இது அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் அல்ட்ராஸ் ரேசர் மாடலுக்கு, அதிகாரப்பூர்வமான முன்பதிவுகளை தொடங்கவில்லை. தற்போதைய நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு சில டாடா டீலர்ஷிப்களில் மட்டும் அல்ட்ராஸ் ரேசர் மாடலுக்கு முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

21 ஆயிரம் ரூபாய் என்ற முன் பணத்தை கட்டி வாடிக்கையாளர்கள் பலரும், டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலை ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா அல்ட்ராஸ் ரேசர் காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Altroz Racer Side Design

அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். டிரான்ஸ்மிஷனை பொறுத்த வரையில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் எல்லாம் டாடா அல்ட்ராஸ் ரேசர் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடல் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) மாடலுக்கு நேரடி போட்டியாக, டாடா அல்ட்ராஸ் ரேசர் இருக்கும். செயல்திறன் மிக்க ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா அல்ட்ராஸ் ரேசர் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 23:27 [IST]
English summary
Tata altroz racer unofficial bookings open in india all details here
மேலும்... #Tata Altroz Racer #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+