டாடா மோட்டார்ஸ் பக்காவா பிளான் உடன் இருக்கு - ஹூண்டாய் கார் வாங்கும் திட்டத்தில் இருப்பவர்கள் தான் டார்க்கெட்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் புதிய அல்ட்ராஸ் ரேஸர் (Altroz Racer) காரை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான அல்ட்ராஸ் காரை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக புதிய அல்ட்ராஸ் ரேஸர் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இந்த காரில் பவர்ஃபுல்லான டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. விற்பனையில் டாடா அல்ட்ராஸ் காருக்கு ஹூண்டாய் ஐ20 போட்டியாக உள்ளது. ஹூண்டாய் ஐ20 காரிலும் பவர்ஃபுல்லான வெர்சனாக ஐ20 என் லைன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் பார்த்தால், ஹூண்டாய் ஐ20 என் லைன் காருக்கு புதிய டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் போட்டியாக இருக்கும்.

என்ஜின்: இந்த இரு கார்களிலும் என்ஜின் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆதலால், இரண்டிலும் வழங்கப்படும் என்ஜினை பற்றி முதலில் பார்த்துவிடுவோம். நெக்ஸான் காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கியுள்ளது. அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு ட்யூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம்.

tata altroz racer rival

ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அல்ட்ராஸ் ரேஸர் உடன் ஒப்பிடுகையில் இந்த டர்போ என்ஜின் கொஞ்சம் சிறியது என்றாலும், வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் எந்த வித்தியாசமும் இல்லை. ஐ20 என் லைன் காரின் 1.0 லி டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

வெளிப்புற தோற்றம்: சாதாரண அல்ட்ராஸ் மற்றும் ஐ20 கார்களில் இருந்து வேறுப்பட்டு தெரியும் வகையில் இந்த இரு கார்களும் வெளிப்பக்க தோற்றத்தில் சில வித்தியாசங்களை கொண்டுள்ளன. ஐ20 என் லைன் காருக்கு பின் அல்ட்ராஸ் ரேஸர் கார் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இந்த காரின் வெளிப்பக்க தோற்றத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளது. அதாவது, ஐ20 என் லைன் காரின் வெளி தோற்றத்தை விட ஸ்பெஷலானதாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ட்ராஸ் ரேஸர் காரின் வெளி தோற்றத்தில் டாடா நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

tata altroz racer rival

புதிய அல்ட்ராஸ் ரேஸர் கார் கருப்பு நிறத்திலான மேற்கூரை உடன் ஆரஞ்ச் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. காரின் பொனெட் மற்றும் ரூஃப் மீது வெள்ளை நிறத்தில் இரண்டு தடிமனான கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியே ஐ20 என் லைன் கார் பக்கம் சென்றால், வழக்கமான ஐ20 காரில் வழங்கப்படுவது போல் இல்லாமல், வித்தியாசமான டிசைனில் கிரில் பகுதியை இந்த கார் பெறுகிறது. காரில் இருந்து தனித்து தெரியும் வகையில், காரை சுற்றிலும் பளிச்சிடும் கோடு ஒன்று செல்வதை படங்களில் காணலாம்.

உட்புற தோற்றம் & தொழிற்நுட்ப வசதிகள்: பவர்ஃபுல்லான கார் என்பதை உணர்த்தும் விதமாக இந்த இரு கார்களின் உட்பக்க கேபின்கள் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்படுகின்றன அதேநேரம், ஸ்டைலான தோற்றத்திற்காக இந்த கார்களினுள் ஆங்காங்கே பளிச்சிடும் நிறங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த வகையில், புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரில் வெள்ளை & ஆரஞ்சு நிறங்களும், ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் சிவப்பு நிறமும் ஹைலைட்டாக வழங்கப்பட்டுள்ளது.

tata altroz racer rival

ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேட், சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரில் ஐ20 என் லைன் காரில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் பெறலாம். கூடுதலாக, 360-டிகிரி கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, வெண்டிலேட்டட் இருக்கைகளையும் பெறலாம்.

விலைகள்: புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரை ஆர்1, ஆர்2, ஆர்3 என மொத்தம் 3 வேரியண்ட்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இவற்றின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.49 லட்சம் - ரூ.10.99 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் ஐ20 என் லைன் கார் என்6 மற்றும் என்8 என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12.52 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்ஜின் பவரில் இந்த இரு கார்களுக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். அதேபோல், தோற்றத்திலும் இவை இரண்டிற்கும் இடையே பெரியதாக எந்த வேறுப்பாடும் இல்லை. உடனடியாக இவை இரண்டில் ஒரு காரை வாங்க வேண்டுமென்றால், ஹூண்டாய் ஐ20 என் லைன் பக்கம் செல்லலாம். ஏனெனில், டாடா அல்ட்ராஸ் ரேஸர் காரை இன்னும் நாங்கள் ஓட்டி பார்க்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2024, 8:00 [IST]
English summary
Tata altroz racer vs hyundai i20 n line check full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X