டாடா அல்ட்ராஸ் ரேஸரை எல்லாரும் வாங்கி குவிக்க போறாங்க!! டர்போ என்ஜின் உடன் கிடைத்தால் யார்தான் வாங்க மாட்டாங்க
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் அல்ட்ராஸ் ரேஸர் (Altroz Racer) காரை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய அல்ட்ராஸ் கார் பல்வேறு புதிய அம்சங்களை பெற்றுவர உள்ளது. அதில் முக்கியமானது டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகும். இதன் மூலமாக, டர்போ என்ஜினில் அல்ட்ராஸ் காரை வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவுள்ளது. இந்த டர்போ என்ஜினை பற்றியும், புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸின் புதிய அல்ட்ராஸ் ரேஸர் கார் இன்று (ஜூன் 7) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வழக்கமான டாடா அல்ட்ராஸ் கார் வேரியண்ட்களில் இருந்து இந்த 3 வேரியண்ட்கள் தனியாக இருக்கும். அதாவது, வழக்கமான அல்ட்ராஸ் காருடன் சேர்க்காமல் புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரை தனியாக விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், தோற்றம் மட்டும் ஒன்றே மற்றப்படி அல்ட்ராஸ் ரேஸர் மொத்தமாக வேற கார் ஆகும்.
இதற்கேற்ப மிகவும் ஸ்டைலான பாகங்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய சில தொழிற்நுட்ப வசதிகள் இந்த காரில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதேநேரம், அப்கிரேட் செய்யப்பட்ட என்ஜின் ஆப்ஷன்களையும் அல்ட்ராஸ் ரேஸர் பெற்றுவர உள்ளது. அல்ட்ராஸ் காரில் கொடுக்கப்படும் அதே ஐ-டர்போ பெட்ரோல் என்ஜின் தான் புதிய அல்ட்ராஸ் ரேஸரிலும் கொடுக்கப்படுகிறது.

என்றாலும், அந்த டர்போ என்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்கிரேட் செய்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 110 பிஎஸ் மற்றும் 140 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் முதன்முதலாக டாடா நெக்ஸானில் வழங்கப்பட்டது.
அல்ட்ராஸ் காரை போன்று, அல்ட்ராஸ் ரேஸர் காரிலும் டர்போ என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை டாடா நிறுவனம் வழங்க வாய்ப்பில்லை. அல்ட்ராஸ் ரேஸர் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும். இந்த டர்போ என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
அதேநேரம், 110 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனையும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டுமே பெற முடியும். இருப்பினும், இன்னும் அல்ட்ராஸ் ரேஸர் கார் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், இதுகுறித்த உறுதியாக தகவல்களுக்கு சிறிது நேரம் காத்திருத்தல் நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக புதிய அல்ட்ராஸ் ரேஸர் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அத்துடன், அல்ட்ராஸ் காரை ஆற்றல்மிக்கதாக கொண்டுவரும் முயற்சியாகவும் அல்ட்ராஸ் ரேஸரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய காரின் விலை எவ்வளவாக நிர்ணயிக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








