சோப்பு டப்பாக்களுக்கு பாடம் நடத்தும் டாடா கார்... விலை இவ்ளோதானா... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த டாடா அல்ட்ராஸ் காரின் பிப்ரவரி (February) மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,568 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3,955 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து டாடா அல்ட்ராஸ் அசத்தியுள்ளது.

டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல் வெர்ஷன்களில் 1.2 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் இதன் டீசல் வெர்ஷன்களில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதுதவிர டாடா அல்ட்ராஸ் காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. இதன் சிஎன்ஜி வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது 1.2 லிட்டர் இன்ஜின் ஆகும். டீசல் இன்ஜினை போல், சிஎன்ஜி இன்ஜினுடம் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியது.

அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 6.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.80 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது சரியான விலை நிர்ணயமாக கருதப்படுகிறது. அத்துடன் டாடா அல்ட்ராஸ் காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. டாடா அல்ட்ராஸ் காரில் பாதுகாப்பிற்கும் பஞ்சம் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா அல்ட்ராஸ் கார் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடிய விரைவில் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு பிறகு டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








