பாதுகாப்பு, மைலேஜ் எல்லாமே இருக்கு! ஆனா யாருமே வாங்க மாட்டேங்கறாங்க! பரிதாப நிலையில் டாடா நிறுவனத்தின் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 3,444 அல்ட்ராஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 7,817 ஆக இருந்தது.

இது 56 சதவீத வீழ்ச்சியாகும். நடப்பு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டுமல்லாது, சமீப காலமாகவே டாடா அல்ட்ராஸ் கார் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்து கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இது இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும்.

Tata Altroz Racer

ஆம், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், டாடா அல்ட்ராஸ் கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கியுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.65 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.35 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதுதவிர டாடா அல்ட்ராஸ் காரில் ரேசர் (Tata Altroz Racer) என்ற மாடலும் தனியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tata Altroz Racer Interior Design

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் ரேசர் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.49 லட்ச ரூபாய் ஆகவும், இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.99 லட்ச ரூபாய் ஆகவும் இருந்து வருகிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டாடா அல்ட்ராஸ் கார் மிகவும் பாதுகாப்பானது என்பதை போல், சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. இருப்பதிலேயே அதிகபட்சமாக இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாதுகாப்பானது என்பதுடன், அதிக மைலேஜ் வழங்க கூடிய காராகவும் இருக்கும் நிலையிலும், டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை 'டல்' அடித்து கொண்டுள்ளது. எனவே அல்ட்ராஸ் காரின் விற்பனையை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுக்கும் என நம்பப்படுகிறது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) ஆகிய பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா அல்ட்ராஸ் இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 18, 2024, 23:44 [IST]
English summary
Tata altroz sales report july 2024 56 per cent degrowth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+