டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 5,985 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 3,862 ஆக மட்டுமே இருந்தது. இது 55 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக, இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான ஹேட்ச்பேக் கார்களன் பட்டியலில், டாடா அல்ட்ராஸ் 6வது இடத்தை பிடித்துள்ளது. டாடா அல்ட்ராஸ் கார், பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் பெட்ரோல் வெர்ஷன்களில், 1.2 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Gear Box)ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. மறுபக்கம் இந்த காரின் டீசல் வெர்ஷன்களில், 1.5 லிட்டர் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் டாடா அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி வெர்ஷன்களில், பெட்ரோல் வெர்ஷன்களில் வழங்கப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் இன்ஜின்தான் இடம்பெற்றுள்ளது. டீசல் வெர்ஷன்களை போல், சிஎன்ஜி வெர்ஷனிலும், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை 6.65 லட்ச ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.80 லட்ச ரூபாய் ஆக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுடன், டாடா அல்ட்ராஸ் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது. அத்துடன் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காருக்கும், டாடா அல்ட்ராஸ் நேரடி போட்டி மாடல்தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை நிர்ணயம் சரியாக செய்யப்பட்டிருப்பதும், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி என 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைப்பதும், டாடா அல்ட்ராஸ் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்கள் என்பது எங்கள் கருத்து. அத்துடன் டாடா அல்ட்ராஸ் மிகவும் பாதுகாப்பான காரும் கூட!
ஆம், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கியுள்ளது. இதன் காரணமாகவும் டாடா அல்ட்ராஸ் காரை வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பி வாங்குகின்றனர். இனி வரும் மாதங்களில் டாடா அல்ட்ராஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயரலாம் என்பது எங்கள் கருத்து.
டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV) விற்பனைக்கு வரவிருப்பதுதான் இதற்கு காரணம். இது டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், டாடா அல்ட்ராஸ் இவி விற்பனையில் சாதிக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








