ரத்தன் டாடா உயிரோட இருந்திருந்தா இந்த கொடுமை எல்லாம் நடந்திருக்குமா? டாடாவிற்கு டாட்டா காட்டும் இந்திய மக்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த டாடா அல்ட்ராஸ் காரின், நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம், 2,642 அல்ட்ராஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5,984 ஆக இருந்தது.
இது 56 சதவீத வீழ்ச்சி ஆகும். இது மிகப்பெரிய சரிவு என்பதுடன், கடந்த 6 மாத கால அளவில் இதுதான் டாடா அல்ட்ராஸ் காரின் மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் 4,983 டாடா அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதை தொடர்ந்து வந்த ஜூன் மாதத்தில் 3,937 டாடா அல்ட்ராஸ் கார்களும், ஜூலை மாதத்தில் 3,444 டாடா அல்ட்ராஸ் கார்களும், ஆகஸ்ட் மாதத்தில் 3,031 டாடா அல்ட்ராஸ் கார்களும், செப்டம்பர் மாதத்தில் 2,758 டாடா அல்ட்ராஸ் கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
இறுதியாக அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 2,642 ஆக குறைந்துள்ளது. டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருவதை இந்த புள்ளி விபரங்கள் நமக்கு மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகின்றன. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் போதிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர முடியும்.

டாடா அல்ட்ராஸ் கார் தற்போதைய நிலையில் 6.65 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.35 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டாடா அல்ட்ராஸ் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அத்துடன் சிங்கிள் பேன் சன்ரூஃப், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகளும் (Features) கொடுக்கப்படுகின்றன.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், இது குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாங்கிய கார் ஆகும். 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) உள்ளிட்ட கார்களுக்கு எல்லாம், டாடா அல்ட்ராஸ் கார், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.
ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இது போதாத காலம் போல. ஏனெனில் கடந்த அக்டோபர் மாதம் ரத்தன் டாடா (Ratan Tata) மறைந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் கார் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. அத்துடன் கடந்த அக்டோபர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் விற்பனையும் கூட வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.
இத்தனைக்கும் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் பண்டிகை காலம் ஆகும். இந்த சமயத்தில் மக்கள் அதிகளவில் கார்களை வாங்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், டாடா மோட்டார்ஸ் சரிவை சந்தித்திருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது. இதே காலகட்டத்தில் டாடாவின் பல்வேறு போட்டி நிறுவனங்களும் விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை சந்தித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








