முதல் இரண்டு இடத்தை தவறவிட்ட மாருதி சுஸுகி... டாடாகிட்ட வாங்கிய அடி ரொம்ப பலமா இருக்கும் போலையே!

2023-24 நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை இதுவரை இல்லாத அளவிற்கு, அதாவது, வரலாற்று சாதனைப் படைக்கும் அளவிற்கு விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations) வெளியிட்டு இருக்கும் தகவலின் வாயிலாகவே இது தெரிய வந்திருக்கின்றது.

2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை (நிதியாண்டு 2024)இல் பயணிகள் வாகன பிரிவில் 39,48,143 யூனிட்டுகள் புதிய வாகனங்கள் விற்பனையாகி இருப்பதாகவே ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கின்றது. இதில் எஸ்யூவி கார்கள் மட்டுமே 50 சதவீதம் ஆகும்.

Car sales

ஆமாங்க இந்தியாவில் விற்பனையாகும் பயணிகள் வாகனங்களில் பாதிக்கு பாதி எஸ்யூவி கார் மாடல்களே ஆகும். நிதியாண்டில் இருந்து நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கும் இதே பயணிகள் வாகன பிரிவு சென்ற ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சற்று குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையை பெற்றிருக்கின்றது.

ஆமாங்க, அது விற்பனை சரிவைச் சந்தித்து இருக்கின்றது. சுமார் 6.17 சதவீதம் வரை அது விற்பனை வீழ்ச்சியை 2024 மார்ச்சில் சந்தித்து உள்ளது. இருப்பினும், நிதியாண்டு-டூ-நிதியாண்டு விற்பனை சதவீதம் வளர்ச்சியின் உச்சிக்கே சென்றிருக்கின்றது. இதுவே பலருக்கும் ஆச்சரியமளிக்கும் தகவலாக அமைந்து உள்ளது.

இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் மார்ச் 2023 இல் நம்பர் 1 விற்பனையாகும் கார் மாடலாக இருந்தவை 2024 மார்ச் மாதத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. 2023 மார்ச் மாதத்தில் நம்பர் 1 விற்பனையான கார் மாடலாக மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட் இருந்தது.

ஆனால், இந்த ஆண்டு அந்த இடத்தை டாடா பஞ்ச் அதன் இடத்தில் இருந்து தட்டி பறித்திருக்கின்றது. 17,547 யூனிட்டுகள் விற்பனையைப் பெற்று அது இந்த இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளையில், மார்ச் 2023இல் விற்பனையில் முதல் இடத்தில் இருந்த அதே ஸ்விஃப்ட் மிகப் பெரிய விற்பனைச் சந்தித்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், சென்ற 2023 மார்ச் மாதத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த மாருதி சுஸுகி வேகன்ஆர் மார்ச் 2024இல் மூன்றாவது இடத்தை நோக்கி தள்ளப்பட்டு இருக்கின்றது. 17,305 யூனிட்டுகள் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனையாகிய நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 16,368 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

இது பிடித்திருந்த இடத்தை தற்போது ஹூண்டாய் கிரெட்டா பிடித்திருக்கின்றது. 16,458 யூனிட்டுகள் வரை 2024 மார்ச்சில் அது விற்பனையாகி இருக்கின்றது. எனவே 2024 மார்ச் மாதத்தில் மாருதி சுஸுகி முதல் இரண்டு இடத்தையும் தவற விட்டிருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

சென்ற மார்ச் மாதத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் நான்காவது இடத்தில் டிசையரும், ஆறாவது இடத்தில் பலினோவும் உள்ளது. டிசையர் 15,894 யூனிட்டுகளும், பலினோ 15,588 யூனிட்டுகளுமே போன மார்ச் மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன. 2023இல் இதே டிசையர் ஏழாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது அதுவே நான்காவது இடத்திற்கு முன்னேறியிருக்கின்றது. அதேவேளையில், பலினோ நான்காவது இடத்தில் இருந்தே தற்போது ஆறாவது இடத்திற்கு நகர்ந்திருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக ஏழாவது இடத்தில் மஹிந்திராவின் ஸ்கார்பியோ (15,151 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன)-வும், 8வது இடத்தில் மாருதி சுஸுகி எர்டிகாவும் (14,888 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன) உள்ளன.

இதைத்தொடர்ந்து, ஒன்பதாவது இடத்தில் பிரெஸ்ஸாவும் (14,614 யூனிட்டுகளும் விற்பனையாகி இருக்கின்றன) மற்றும் பத்தாவது இடத்தை டாடா நெக்ஸானும் (14,058 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன) பிடித்திருக்கின்றன. டாடா நெக்ஸான் சென்ற மார்ச் மாதத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் நடப்பாண்டில் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மற்றும் ஹூண்டாய் இந்த இரண்டு நிறுவனங்களிடமும் மிகப் பெரிய அடியை மாருதி சுஸுகி வாங்கி இருப்பது ஃபடா வெளியிட்ட தகவலின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. என்னதான் அது முதல் மற்றும் இரண்டாவது இடத்தை இழந்திருந்தாலும் அது ஒட்டுமொத்த விற்பனையில் முதல் இடத்தை இழக்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2024, 22:46 [IST]
English summary
Tata and hyundai overtakes maruti in fy2024 sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+