இந்தவொரு டாடா காரை வாங்க ஷோரூம்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியல!! டாடா கார்களுக்கு இவ்வளவு டிமாண்டா!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய 3வது கார் நிறுவனமாக விளங்கிவந்த டாடா மோட்டார்ஸ், கடந்த 2024 பிப்ரவரி மாத கார்கள் விற்பனையில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக ஹூண்டாயை முந்தி 2வது இடத்தை தனதாக்கி உள்ளது.
கடந்த மாதத்தில் மொத்தம் 51,270 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. 2023 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 20% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் மொத்தமாகவே இந்தியாவில் 42,865 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.

ஆனால், 2024 ஜனவரி மாதத்தில் 53,635 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவைகளில் 13.7% டாடா கார்கள் ஆகும். ஆனால், 2023 பிப்ரவரியில் இது 12.8% ஆக மட்டுமே பதிவாகி இருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாடா கார் பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி ஆகும்.
ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக மாருதி சுஸுகி வேகன்ஆருக்கு அடுத்து, 2வது இடத்தில் டாடா பஞ்ச் உள்ளது. கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சுமார் 18,438 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் 11,169 டாடா பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், டாடா பஞ்ச் கார்களின் விற்பனை 65.08% அதிகரித்துள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 18,438 பஞ்ச் கார்களில் டாடா பஞ்ச் இவி என்கிற எலக்ட்ரிக் காரும் அடங்குகிறது. பஞ்ச் காருக்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட காராக 2வது இடத்தில் நெக்ஸான் உள்ளது. கடந்த மாதத்தில் டாடா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ள நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 14,395 ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதனை காட்டிலும் 481 நெக்ஸான் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரை போல், கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 14,395 நெக்ஸான் கார்களில் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகிறது. இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள டாடா கார், டியாகோ ஹேட்ச்பேக் ஆகும். பஞ்ச் மற்றும் நெக்ஸான் மாடலை போன்று, டாடா டியாகோ கார்களும், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் 6,947 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் இதனை காட்டிலும் 510 கார்கள் அதிகமாக 7,457 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டியாகோவிற்கு அடுத்து, அல்ட்ராஸ் என்கிற பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார்கள் கடந்த மாதத்தில் டாடா நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 4,568 அல்ட்ராஸ் கார்கள் கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் 3,955 அல்ட்ராஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அல்ட்ராஸுக்கு அடுத்து, 5வது இடத்தில் டாடா சஃபாரி என்கிற டாடாவின் விலையுயர்ந்த கார் உள்ளது. பெரும்பாலும், டாடா நிறுவனத்தில் இருந்து விற்பனையாகக்கூடிய கார் சஃபாரி ஆகும். ஏனெனில், அந்த அளவிற்கு சஃபாரி காரின் விலைகள் அதிகமாக உள்ளன.

சஃபாரிக்கு அடுத்து ஹெரியர் 2,562 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் மொத்தம் 2,562 டாடா ஹெரியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சஃபாரி மாடலின் 5-இருக்கை வெர்சன் தான் ஹெரியர் ஆகும். அதாவது, சஃபாரி மற்றும் ஹெரியர் என இரண்டும் டிசைனில் ஒரே மாதிரியானவை. ஆனால், சஃபாரியை காட்டிலும் ஹெரியர் அளவில் சிறியது ஆகும். இவை இல்லாமல், கடந்த மாதத்தில் 1,712 டிகோர் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் 7 கார்களில் கிட்டத்தட்ட 4 கார்கள் எலக்ட்ரிக் வெர்சனில் கிடைக்கின்றன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், எலக்ட்ரிக் கார்கள் மூலமாகவே ஹூண்டாயை கடந்த மாத விற்பனையில் டாடா நிறுவனம் முந்தியுள்ளது. இருப்பினும், ஹெரியர் கார்களை காட்டிலும், கடந்த மாதத்தில் அதிக சஃபாரி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









