டாடாவில் இந்த ஒரு காருக்கு பயங்கர டிமாண்ட் - மாருதி கார்களுக்கு இணையான மவுசு! சேல்ஸ் ரிப்போர்ட் என்ன சொல்லுது?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவின் தவிர்க்க முடியாத முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, நெக்ஸான் காரின் அறிமுகத்திற்கு பின்னர் கடந்த சில வருடங்களில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் அடைந்திருக்கும் உயரம் பெரியது. சில மாதங்களில் ஹூண்டாயை கூட கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் முந்தி ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட கார் உற்பத்தி நிறுவனம் கடந்த 2024 மே மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் மொத்தம் 7 விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் எஸ்யூவி கார்கள், ஹேட்ச்பேக் கார்கள் மற்றும் செடான் கார் என பல்வேறு வகையான கார்கள் உள்ளன. இவை மொத்தமாக கடந்த மே மாதத்தில் 46,700 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

tata cars may sales report

ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் வெறும் 45,880 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், டாடா கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 2% அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் 7 கார் மாடல்களில், சமீப காலமாக விற்பனையில் முதலிடத்தை பிடித்து வருவது பஞ்ச் ஆகும். ஆனால், கடந்த ஆண்டுகளில் அதிகம் பேர் வாங்கும் டாடா காராக நெக்ஸான் முதலிடத்தை பிடித்துவந்தது.

நெக்ஸானை காட்டிலும் விலை குறைவானதாகவும், அதே பாதுகாப்பு தரத்தில் கிடைப்பதாலும் நிறைய பேர் டாடா பஞ்ச் காரை வாங்குகின்றனர். இன்னும் சொல்லப்போனால், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்து ஆச்சிரியப்படுத்தியது. ஆனால், கடந்த மே மாத விற்பனையில் டாடா பஞ்சை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் முந்தியுள்ளது.

tata cars may sales report

கடந்த 2024 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா பஞ்ச் கார்களின் எண்ணிக்கை 18,949 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு இதே மே மாதத்தில் வெறும் 11,124 பஞ்ச கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, 2023 மே மாதத்தை காட்டிலும் 2024 மே மாதத்தில் பஞ்ச் கார்களின் விற்பனை ஆனது சுமார் 70% அதிகரித்துள்ளது.

பஞ்ச் காருக்கு அடுத்து, அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக 2வது இடத்தை நெக்ஸான் பிடித்துள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 11,457 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த மே மாதத்தில் இதனை காட்டிலும் 3,966 கார்கள் அதிகமாக 14,423 நெக்ஸான் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

tata cars may sales report

பஞ்ச் மற்றும் நெக்ஸான் இந்த இரு கார்கள் தான் தற்போதைக்கு டாடா மோட்டார்ஸின் பிரதான கார்களாக உள்ளன. இவற்றிற்கு அடுத்து, 3வது இடத்தில் டாடா டியாகோ 5,927 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இந்தியாவில் பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார்களுள் ஒன்றாக விளங்கும் டியாகோவின் விற்பனையும் 2023 மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. ஏனெனில், அந்த மாதத்தில் 8,133 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வரிசையில் 4வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் மாடர்ன் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸ் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 4,983 அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 5வது இடத்தை டாடா மோட்டார்ஸின் ஒரேயொரு செடான் ரக காரான டிகோர் உள்ளது. கடந்த மே மாதத்தில் 2,098 டிகோர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸின் மற்ற இரு கார்களான சஃபாரி மற்றும் ஹெரியர் நடந்த முடிந்த மே மாதத்தில் முறையே 1,661 மற்றும் 1,625 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஞ்ச் காரை தவிர்த்து, மற்ற அனைத்து டாடா கார்களின் விற்பனையும் 2023 மே மாதத்தை காட்டிலும் கடந்த 2024 மே மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததுள்ளது. இருப்பினும், டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை மொத்தமாக 2% அதிகரித்துள்ளது. இதில் இருந்து, மற்ற டாடா கார்களை வாங்கும் திட்டத்தில் இருந்தவர்களை பஞ்ச் தன் பக்கம் கவர்ந்திருப்பதை அறிய முடிகிறது. குறிப்பாக, நெக்ஸானை வாங்கும் பிளானில் இருந்தவர்கள் பலர் டாடா பஞ்ச் காரை வாங்குகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 15, 2024, 8:00 [IST]
English summary
Tata cars sales report may 2024 punch nexon tiago check all details here
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X