இருங்க பாய்... புத்தாண்டு பிறந்ததும் சம்பவம் பண்ண போகும் டாடா... அந்த 2 காரும் விற்பனைக்கு வரப்போகுதா!

இந்திய சந்தையில் டாடா கார்களுக்கு (Tata Cars) என மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டாரமே உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பதிவு செய்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது நமக்கு தெரியவந்துள்ளது.

இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 47,117 கார்களை விற்பனை செய்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விற்பனை + எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Tata Nexon

இந்த எண்ணிக்கையானது கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம், 46,143 ஆக மட்டுமே இருந்தது. இது 2 சதவீத வளர்ச்சி ஆகும். எலெக்ட்ரிக் கார் பிரிவை மட்டும் தனியாக எடுத்து கொண்டாலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 5,202 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 4,761 ஆக மட்டுமே இருந்தது. இது 9 சதவீத வளர்ச்சி ஆகும்.

Tata Punch

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 8 கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை டாடா டியாகோ, டாடா டிகோர், டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச், டாடா நெக்ஸான், டாடா ஹாரியர், டாடா சஃபாரி மற்றும் டாடா கர்வ் ஆகியவை ஆகும்.

இதில், டியாகோ, டிகோர், பன்ச், நெக்ஸான் மற்றும் கர்வ் ஆகிய 5 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கூடிய விரைவில் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய 2 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அனேகமாக வரும் 2025ம் ஆண்டில் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நிறுவன கார்கள் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு பாதுகாப்பு மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பல்வேறு கார்கள் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இதன் காரணமாகவே டாடா கார்களை பலரும் விரும்புகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 3, 2024, 21:37 [IST]
English summary
Tata cars sales report november 2024 2 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+