ஏப்.1ம் தேதி முதல் டாடா வாகனங்களின் விலை கிடுகிடுவென ஏறப்போகுது! முழு விபரம் இதோ

இந்தியாவின் மிகப்பெரிய கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்களுக்கான விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த வாகனங்களுக்கான விளைவு உயர்வு என்பது அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனத்திற்கும் தற்போது விற்பனையாகும் விலையை விட இரண்டு சதவீதம் விலை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய கமர்சியல் வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான். இந்நிறுவனம் அதிக அளவிலான கமர்ஷியல் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் ஓடும் பெரும்பாலான வாகனங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த கமர்ஷியல் வாகனங்களாக உள்ளன. இந்நிலையில் இந்நிறுவனம் தனது கமர்ஷியல் வாகனங்களுக்கான விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

tata commercial vehicle price hike

அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தனது வாகனங்களுக்கான விலையை இரண்டு சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி இது தற்போது விற்பனையாகும் விலையை விட வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வாகனங்களின் விலை இரண்டு சதவீதம் வரை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியன்டை பொறுத்து இந்த விலை உயர்வு என்பது மாறுபடும்.

ஆனால் அனைத்து ரக வாகனங்களுக்கும் விலை உயர்வு என்பது கட்டாயமாக இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. கமர்ஷியல் செக்மென்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. பயணிகள் வாகன செக்மெண்டில் டாப் 3 இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் தனது விற்பனையை செய்யவில்லை. சர்வதேச அளவில் வாகனங்களை விற்பனை செய்கிறது.

tata commercial vehicle price hike

அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் இந்தியா மட்டுமல்லாமல் லண்டன், அமெரிக்கா, இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலும் விற்பனையாகி வருகின்றன. வெளிநாடுகளில் புதிதாக வாகனம் வாங்க நினைக்கும் நபர்கள் கூட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை தேர்வு செய்ய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு தகுந்தாற்போல் தங்கள் வாகனங்களை தயாரித்து வருகின்றனர்.

இந்தியா, லண்டன், தென்கொரியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நேரடியாக வாகனங்களை விற்பனை செய்கிறது. இது மட்டுமல்லாமல் ஏற்றுமதி மூலம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தின் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சார்க் நாடுகளுக்கும் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 88 நாடுகளுக்கு எனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதை துணை நிறுவனங்கள் மூலமாகவும் இணைப்பு நிறுவனங்கள் மூலமாகவும் நேரடியாகவும் அல்லது இரண்டு மூன்று நிறுவனங்களுடன் சேர்ந்து ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் இந்நிறுவனம் பயணிகள் வாகன செக்மெண்டில் ஹூண்டாய் நிறுவனத்தை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 51,321 கார்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் வெறும் 50,201 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. டாடா நிறுவனத்திடம் நெக்ஸான், பஞ்ச், டயாகோ, அல்ட்ராஸ், மற்றும் டிகோர் ஆகிய கார்கள் சிறப்பாக விற்பனையாகி உள்ளன.

டாடா நிறுவனம் தற்போது விலை ஏற்றம் அறிவித்துள்ளது தனது கமர்ஷியல் வாகனங்களுக்காக மட்டும்தான். பயணிகள் வாகன விலையில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை. கமர்ஷியல் வாகனங்களுக்கு மட்டுமே விலை உயர்வு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில் மட்டும் தான் விலை உயர்வு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி விலையில் மாற்றங்கள் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது இந்த நிதியாண்டு முடிந்த பின்பு பல்வேறு விலையேற்றங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் பல நிறுவனங்கள் விலையேற்றத்தை அறிவித்த நிலையில் இந்த விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த மூன்று மாதங்களுக்குள் விளைவு ஏற்ற மீண்டும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2024, 18:30 [IST]
English summary
Tata commercial vehicle price hike up to 2 percent
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+