டாடா புதுசா உருவாக்கும் கார் என்று சொன்னால் நம்பவே முடியல... போர்ஷே கம்பெனிக்காரன் பார்த்தால் ஷாக் ஆயிடுவான்!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்வ் என்கிற பெயரில் கூபே கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வெர்சனிலும் கர்வ் இவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் சொல்ல போனால், டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் தான் முதலாவதாக வருகிற ஆகஸ்ட் 7இல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்பின்னரே பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷனை கொண்ட கர்வ் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால், விளம்பரத்திற்காக நிறைய டாடா கர்வ் கார்கள் வெளியே வந்துள்ளன.
அந்த வகையில், அட்டகாசமான சிவப்பு நிறத்தில் டாடா கர்வ் கார் ஒன்று தனியார் பகுதியின் வளாகத்திற்குள் காட்சி தந்துள்ளது. அப்போது இரகசியமாக எடுக்கப்பட்ட காரின் படங்கள் விஜே நெகி என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யாருக்கும் தெரியாமல் இரகசியமாக எடுக்கப்பட்டு இருப்பினும், இந்த படங்களில் கர்வ் காரை சுற்றிலும் காண முடிகிறது.

டாடா கர்வ் காரின் முன்பக்கத்தில் எல்இடி டி.ஆர்.எல்-களை கனெக்ட் செய்யும் விதமாக எல்இடி பார் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதனை வெல்கம் எல்இடி பார் என டாடா மோட்டார்ஸ் அழைக்கிறது. புரோஜெக்டர் எல்இடி ஹெட்லைட்கள் பம்பரினுள் பொருத்தப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்கள் இரட்டை நிறங்களில் காட்சியளிக்கின்றன. சக்கரங்களுக்கு மேலே பளபளப்பான கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங்குகள் முன்பக்க பம்பரில் இருந்து பின்பக்க பம்பர் வரையில் செல்கின்றன. மோதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், காருக்கு அடியில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. கூபே கார் என்பதால், மேற்கூரை பின்பக்கத்தில் சறுகலாக செல்லும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் ஸ்பாய்லர், எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளன. முன்பக்கத்தை போலவே, காரின் பின்பக்கத்திலும் டெயில்லைட்களை இணைக்கும் வகையில் கனெக்ட்டிங் எல்இடி பார் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நமக்கு கிடைத்துள்ள சிவப்பு நிற கர்வ் காரின் படங்களில், காரின் உட்பக்கத்தை காண முடியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், கார் லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரியை கொண்டிருக்கலாம். முன் இருக்கைகள் நிச்சயமாக வெண்டிலேஷன் வசதியை கொண்டிருக்கும். கர்வ் காரின் டேஸ்போர்டில் பெரிய அளவில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பனோராமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, லெவல்-2 அடாஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்படும் முக்கியமான தொழிற்நுட்ப அம்சங்கள் ஆகும். கர்வ் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கையை டாடா நிறுவனம் வழங்கலாம் என எதிர்பார்க்கிறோம். டாடா கர்வ் காரில் என்னென்ன மாதிரியான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கபட உள்ளன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எங்களுக்கு தெரிந்தவரையில், மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கர்வ் காரில் வழங்கப்படலாம். இரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன். இதில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஒன்றாக இருக்கலாம். டாடா நெக்ஸானில் வழங்கப்படும் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் & டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.
அதேபோல், நெக்ஸான் காரில் கொடுக்கப்படும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் ஆப்ஷனை கர்வ் காரிலும் எதிர்பார்க்கலாம். இந்த இரு என்ஜின்கள் இல்லாமல், 3வது என்ஜின் ஆப்ஷனாக புத்தம் புதிய 1.2 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனை கர்வ் காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் ஆப்ஷன் உடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கர்வ் காரை பற்றிய விபரங்களை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் அறிவித்துவிட்டது. ஆனால், என்ஜின் ஆப்ஷன்கள் குறித்த விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவை வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி தெரிந்துவிடும். சிவப்பு நிறத்தில் டாடா கர்வ் கார் இன்னும் அழகாக, கவர்ச்சிக்கரமானதாக காட்சியளிக்கிறது. பொதுவாகவே, சிவப்பு நிறம் ஆனது எந்தவொரு காருக்கும் எடுப்பான நிறம் ஆகும்.


Click it and Unblock the Notifications









