இது லிஸ்ட்லயே இல்லயே! மாருதிக்கு போட்டியா மைலேஜை வாரி வழங்கும் காரை களமிறக்கும் டாடா! யாருமே எதிர்பாக்காத செக்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனான டாடா கர்வ் இவி (Tata Curvv EV) கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இதன் ஐசி இன்ஜின் (Internal Combustion Engine - ICE) வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது. டாடா கர்வ் ஐசிஇ மாடல், வரும் செப்டம்பர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா கர்வ் ஐசிஇ மாடல், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ஆரம்பத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டாலும் கூட, எதிர்காலத்தில் டாடா கர்வ் ஐசிஇ மாடலில், சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சிஎன்ஜி கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tata Curvv

டாடா கர்வ் சிஎன்ஜி மாடலில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம். பெட்ரோல் மூலமாக இயங்கும்போது, இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது பவர் அவுட்புட் சற்று குறைவாக இருக்கலாம்.

எனினும் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும் என்பது உறுதி. இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). இதன் புதிய சிஎன்ஜி வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Tata Nexon CNG

அனேகமாக வரும் செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரிலும், இதே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான் வழங்கப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா கர்வ் சிஎன்ஜி காரில், இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு சுமார் 25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) காருக்கு நேரடி போட்டியாக, டாடா கர்வ் ஐசிஇ மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களிடம் இருந்தும், இது போட்டியை எதிர்கொள்ளும்.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய 2 கார்களிலும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. எனவே கர்வ் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கினால், அது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

டாடா கர்வ் சிஎன்ஜி கார், 2025ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பவர் அவுட்புட் சற்று குறைவாக இருந்தாலும் பரவாயில்லை... அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டாடா கர்வ் சிஎன்ஜி கார் ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 10, 2024, 16:56 [IST]
English summary
Tata curvv cng india launch details out
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+