டாடா கர்வ் காரை இதற்காகவே வாங்கலாம்... வேறு எந்த காரிலும் இல்லாத அம்சம் - புக் செய்ய ரெடியாகுங்க!!
டாடா கர்வ் (Tata Curvv) மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்படும் புதிய டாடா கார். இன்று (ஆகஸ்ட் 7) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும், டாடா கர்வ் இவி என்கிற எலக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்படுகிறது. நெக்ஸான், பஞ்ச் கார்களை தொடர்ந்து டாடா மோட்டார்ஸின் அடுத்த வெற்றிக்கரமான தயாரிப்பாக கர்வ் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இதன் அறிமுகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. முதலில் கர்வ் இவி எலக்ட்ரிக் கார் மட்டுமே இப்போது அறிமுகம் செய்யப்படும் எனவும், பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்ட டாடா கர்வ் கார் வருகிற செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் டாடா கர்வ் இவி மற்றும் பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷனை கொண்ட கர்வ் காருக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது. டாடா கர்வ் காரில் வழங்கப்பட்டுள்ள 5 முக்கியமான சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கூபே-ஸ்டைலிலான தோற்றம்: இத்தகைய தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்கள் நம் இந்திய சந்தைக்கு மிகவும் புதியதாகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் முதல் கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார் டாடா கர்வ் ஆகும். இதனை தொடர்ந்து சிட்ரோன் நிறுவனம் அதன் பசால்ட் காரை இவ்வாறான தோற்றத்தில் கொண்டுவருகிறது. இத்தகைய கார்களின் பின்பக்கத்தில் தாழ்வான மேற்கூரை வழங்கப்படுகிறது. டாடா கர்வ் காரின் முன் & பின்பக்கத்தில் ஹெட்லைட்களை இணைக்கும் விதத்தில் லைட் பார் வழங்கப்பட்டுள்ளது.
கேபின்: டாடா கர்வ் காரின் உட்பக்க கேபின் குறித்த விபரங்களை டாடா மோட்டார்ஸ் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. ஆனால், நமக்கு கிடைத்துள்ள படங்களின் மூலம், டாடா நெக்ஸானில் உள்ளதை போன்றதான டேஷ்போர்டையும், டாடா ஹெரியரில் உள்ளதை போன்றதான ஸ்டேரிங் சக்கரத்தையும் புதிய டாடா கர்வ் பெற்றுள்ளதை அறிய முடிகிறது. டேஸ்போர்டிலும், டோர் பேட்களிலும் விளக்குகள் வழங்கப்பட்டு இருப்பது கவர்ச்சிக்கரமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்: டாடா கர்வ் காரில் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 12.3-இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் தரத்தில் 10.25-இன்ச் டிஸ்பிளே, பனோராமிக் சன்ரூஃப், வெண்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் உள்ளிட்டவையும், பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், 360-டிகிரி கேமரா உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.
என்ஜின்: டாடாவின் புதிய அடாப்டிவ் டெக் ஃபார்வர்ட் லைஃப்ஸ்டைல் ஆர்ச்சிடெக்சர் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள டாடா கர்வ் காரை 1.2 லிட்டர் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் அல்லது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் வாங்கலாம். இந்த என்ஜின்களுடன் மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட உள்ளன. மற்றப்படி, கர்வ் இவி எலக்ட்ரிக் கார் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

விலை: பெட்ரோல் என்ஜின் உடன் டாடா கர்வ் காரின் ஆரம்ப விலையை ரூ.10.5 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம். டீசல் என்ஜின் உடன் இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக நிர்ணயிக்கப்படும். டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் விலையை ரூ.15 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கலாம். டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் காரை காட்டிலும் விலை அதிகமானதாகவும், அதேநேரம் ஹெரியர் காரை காட்டிலும் விலை குறைவானதாகவும் புதிய டாடா கர்வ் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையில் இந்த புதிய டாடா காருக்கு தற்போதைக்கு எந்த காரும் போட்டியாக இல்லை. விரைவில் சிட்ரோன் பசால்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விலை மட்டும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டால், டாடா மோட்டார்ஸின் புதிய வெற்றி மாடலாக கர்வ் விளங்கும் என்பது உறுதி. இதற்கேற்ப இந்த காரின் தோற்றமும் புதுமையானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications









