ஒரு தடவ சார்ஜ் பண்ணா சென்னை-கோவை போயிரலாம்! விலை இவ்ளோதானா! இப்படி ஒரு எலெக்ட்ரிக் காருக்காகதான் வெயிட்டிங்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் (Tata Curvv). இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி (August 7) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அன்றைய தினம் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் பேட்டரி ஆப்ஷன்கள் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இதன் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்களில், 55 kWh லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 600 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.

Tata Curvv

இந்த பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில், நிரப்பப்பட கூடியதாக இருக்கும். இந்த பேட்டரிக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை பயன்படுத்தினால், வெறும் பத்தே நிமிடங்களில், 100 கிலோ மீட்டர்கள் பயணம் செய்வதற்கு தேவையான அளவு சார்ஜ் நிரம்பி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விலை குறைவான வேரியண்ட்களில் என்ன பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது? அதன் ரேஞ்ச்? என்ற தகவல்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. வரும் ஆகஸ்ட் 7ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, அனைத்து தகவல்களையும் நாம் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

Tata Curvv EV

வசதிகளை பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப், லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு, 360 டிகிரி கேமரா மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவை டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் முக்கியமான அம்சங்களாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை சுமார் 18 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

பிஒய்டி அட்டோ 3 (BYD Atto 3), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) போன்ற கார்களுக்கு போட்டியாக டாடா கர்வ் இவி களமிறக்கப்படவுள்ளது. அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) எலெக்ட்ரிக் காருக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரை தொடர்ந்து, அதன் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது. ஐசி இன்ஜின் வெர்ஷன் அனேகமாக ஆகஸ்ட் மாத இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2024, 22:35 [IST]
English summary
Tata curvv ev battery details leaked ahead of august 7 launch
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+