டாடா கர்வ் இவி-யை புக் செய்ய ரொம்ப ஆவலோட காத்திருக்கீங்களா.. இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க..

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த டாடா கர்வ் இவி (Tata Curvv EV), நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓர் கூபே எஸ்யூவி (Coupe SUV) ரக எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல் ஆகும். இது இந்திய கார் ஆர்வலர்களின் பல மாத கால எதிர்பார்ப்பாகும். இத்தகைய ஓர் கார் மாடலையே அதிகாரப்பூர்வமாக டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஆனால், இந்த காருக்கான புக்கிங் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

ஆகையால், இந்த காரின் வருகைக்காக காத்திருந்தவர்கள் இப்போது கர்வ் இவி-க்கு எப்போது புக்கிங் பணிகள் தொடங்கும் என காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காருக்கு நாட்டில் எப்போது புக்கிங் தொடங்கும் என்கிற விபரங்கள் வெளியாகி உள்ளன.

Tata curvv ev bookings open august 12

இத்துடன், அக்காரின் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கும் என்கிற விபரங்களும் வெளியாகி உள்ளன. இதுபற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இதுதவிர, டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் பற்றிய சுவாரஷ்ய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகள் வருகின்ற 12 ஆம் தேதியே தொடங்கப்பட இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, டெலிவரி பணிகள் இதே ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதியும் தொடங்கப்பட இருக்கின்றது. இதையே இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

இந்த காரின் அறிமுகத்திற்கு காத்திருந்ததைப் போல இன்னும் பல மாதங்கள் இதை புக் செய்யவும், டெலிவரி பெறவும் காத்திருக்க வேண்டியிருக்குமோ என பலரும் அஞ்சிக் கொண்டிருந்தனர். இந்த வேளையிலேயே இன்னும் ஒரு சில தினங்களில் அனைத்து பணிகளும் அடுத்தடுத்து என விரைவாக தொடங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

டாடா நிறுவனம் இந்த காரை அதன் ஆக்டி.இவி பிளாட்பாரத்தை பயன்படுத்தியே உருவாக்கி இருக்கின்றது. இதே பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே நிறுவனம் அதன் சமீபத்திய அறிமுகமான பஞ்ச்.இவி-யையும் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே, இந்த காரில் காணப்படக் கூடிய சில முக்கிய அம்சங்கள் கர்வ் இவி-யிலும் இடம் பெற்றிருக்கின்றன.

கர்வ் இவி-யை இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கின்றது. வேரியண்டைப் பொருத்த வரை ஐந்து விதமான வேரியண்டுகளிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். கிரியேட்டீவ் (Creative), அக்காம்ப்ளிஷ்டு (Accomplished), அக்காம்ப்ளிஷ்டு பிளஸ் எஸ் (Accomplished+ S), எம்பவர்டு பிளஸ் (Empowered+) மற்றும் எம்பவர்டு பிளஸ் ஏ (Empowered+ A) ஆகியவையே அவை ஆகும்.

45 kWh மற்றும் 55 kWh இந்த இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளே கர்வ் இவியில் வழங்கப்பட இருக்கின்றது. இதில் முதல் பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 502 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 585 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த காரை டாடா மோட்டார்ஸ் தனித்துவமான மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட காராக வடிவமைத்திருக்கின்றது. அதுதவிர, மிக தாராளமாக நவீன கால தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் அது வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், அழகான எல்இடி லைட், தனித்துவமான தோற்றம் கொண்ட அலாய் வீல், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், இரண்டு நிற அலங்கரிப்பைக் கொண்ட கேபின் மற்றும் சில்வர் இன்செர்ட்டுகள் பல கூறுகளைக் கொண்டு இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து, ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகள் கொண்ட 10.23 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 அங்குல டிரைவருக்கான டிஜிட்டல் திரை ஆகியவையும் கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், கார் இணைப்பு தொழில்நுட்பம், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், முன் பக்கத்தில் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், ஆம்பியன்ட் லைட், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் ஆகிய அம்சங்களும் கர்வ் இவியில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல் பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார் மிக தாராளமாகக் கொண்டிருக்கின்றது.

6 ஏர் பேக்குகள் (ஸ்டாண்டர்டாக அனைத்து தேர்வுகளிலும் இருக்கும்), இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் லெவல் 2 வகை அடாஸ் அம்சம் ஆகியவையே இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அறிமுகமாக இந்த காருக்கு ரூ. 17.49 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதனை டாடா மோட்டார்ஸ் அதிக சிறப்புகள் தாங்கிய வாகனமாக உருவாக்கி இருப்பதால் அதற்கு மிக சிறப்பான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா கர்வ் மின்சாரம் மற்றும் ஐசிஇ என இரண்டு விதமான அவதாரங்களிலும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இப்போது கர்வ் இவி-யே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. சீக்கிரமே கர்வ் ஐசிஇ வெர்ஷனும் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2024, 5:00 [IST]
English summary
Tata curvv ev bookings deliveries dates
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+