இந்தியா எங்கயோ போயிருச்சு! இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா! நாடு முழுக்க டெலிவரியை தொடங்கீட்டாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று டாடா கர்வ் இவி (Tata Curvv EV). இதுதான் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி (India's First Electric Coupe SUV) ரக கார் ஆகும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 45 kWh மற்றும் 55 kWh ஆகியவை ஆகும்.

இதில், 45 kWh பேட்டரி பொருத்தப்பட்ட மாடல்களின் பவர் அவுட்புட் 148 பிஹெச்பி மற்றும் 215 என்எம் ஆக உள்ளது. மறுபக்கம் 55 kWh பேட்டரி பொருத்தப்பட்ட மாடல்களின் பவர் அவுட்புட் 165 பிஹெச்பி மற்றும் 215 என்எம் ஆக இருக்கிறது.

Tata Curvv EV

அதே நேரத்தில் 45 kWh பேட்டரி பொருத்தப்பட்ட மாடல்களின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 502 கிலோ மீட்டர்கள் எனவும், 55 kWh பேட்டரி பொருத்தப்பட்ட மாடல்களின் டிரைவிங் ரேஞ்ச் 585 கிலோ மீட்டர்கள் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய அம்சங்கள் எல்லாம் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

Tata Curvv EV Deliveries Commence

இதுதவிர கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், லெவல் 2 அடாஸ் உள்ளிட்ட வசதிகளும், டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பான டிரைவிங் ரேஞ்ச், ஏராளமான அதிநவீன வசதிகள் என அமர்க்களப்படுத்தினாலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் இவி எலெக்ட்ரிக் காருக்கு சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது.

டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 17.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 21.99 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

இது சவாலான விலை நிர்ணயம் என்பதால், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் கருதப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா முழுக்க டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

எனவே இனி இந்திய சாலைகளில் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரை நாம் பார்க்கலாம். இதற்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் காரின் ஐசி இன்ஜின் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டாடா கர்வ் ஐசி இன்ஜின் மாடல், வரும் செப்டம்பர் 2ம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிரைவிங் ரேஞ்ச் மற்றும் வசதிகளின் பட்டியல் சிறப்பாக இருப்பதாலும், சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாலும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 23, 2024, 19:55 [IST]
English summary
Tata curvv ev deliveries commence across india video
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+