டாடா உருவாக்கும் கார் என சொன்னால் நிறைய பேர் நம்ப மாட்றாங்க!! லம்போர்கினி கார் எல்லாம் ஓரமா தான் நிக்கனும்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்வ் (Curvv) என்கிற பெயரில் புதிய கூபே எஸ்யூவி காரை அறிமுகம் செய்திருந்தது. கர்வ் இவி என்கிற எலக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டாடா கார்களின் டெலிவிரிகள் ஏற்கனவே துவங்கிவிட்டதால், இவை கஸ்டமர்களின் கைகளுக்கு செல்ல துவங்கிவிட்டன. அவ்வாறு கர்வ் இவி எலக்ட்ரிக் காரை வாங்கிய கஸ்டமர் ஒருவர் அதனை முழுவதுமாக கவர்ச்சிக்கரமான மஞ்சள் நிறத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார். இந்த குறிப்பிட்ட டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

லம்போர்கினி உருஸ் (lamborghini Urus), லம்போர்கினியின் முதல் எஸ்யூவி கார். உலகின் பவர்ஃபுல்லான எஸ்யூவி காராக உருஸ் விளங்குகிறது. உருஸ் பல்வேறு விதமான கலர்களில் கிடைக்கிறது. ஆனால், அவற்றுள் ஹைலைட்டானது மஞ்சள் நிறமாகும். பொதுவாகவே, லம்போர்கினி கார்களின் அடையாளமே அவற்றின் மஞ்சள் தான். பெரும்பாலான லம்போர்கினி கார்கள் மஞ்சள் நிறத்தில் கிடைக்கின்றன.

tata curvv ev In yellow

அவற்றுள் உருஸ் ஆனது இன்னும் கூடுதல் அழகானது என்றுதான் சொல்ல வேண்டும். உருஸில் வழங்கப்படும் அந்த மஞ்சள் நிறத்தை யெல்லோ சன்பர்ஸ்ட் என அழைக்கின்றனர். இந்த பளபளக்கும் மஞ்சள் நிறத்திற்காகவே லம்போர்கினி உருஸ் காரை உலகில் பல பகுதிகளில் மக்கள் ஆர்வமாக வாங்குகின்றனர். கிட்டத்தட்ட அதே மஞ்சள் நிறத்திற்கு இங்கு ஒரு டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு காரை மாற்றியவர்கள் இதுதொடர்பான வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். காரை இவ்வாறு மாற்றிய நிறுவனம் கேரளாவின் கொச்சியில் உள்ளது. டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் பிரிஸ்டைன் வெள்ளை, எரியும் சிவப்பு, எம்பவர்டு வெள்ளை, ப்யூர் கிரே மற்றும் விர்டியுவல் சன்ரைஸ் என 5 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

tata curvv ev In yellow

இதில், உருஸ் காரின் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட டாடா கர்வ் இவி கார் முன்பு பிரிஸ்டைன் வெள்ளை நிறத்தில் இருந்தது. காரின் நிறம் மாற்றப்பட்டு இருப்பதுடன், கேபினும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. லம்போர்கினி கார்களை போன்று, இந்த கர்வ் இவி காரினுள் பல்வேறு லேயர்கள் சேர்ந்த பேட்டர்னில் அலங்கரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

காரின் டேஸ்போர்டில் கூடுதல் லெதர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. காரின் வெளிப்பக்கம் பளிச்சிடும் மஞ்சள் நிறத்தில் இருக்க, உட்புறம் முழுவதுமாக அடர் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கர்வ் இவி காரில் முன்பக்கத்தில் வெண்டிலேட்டட் இருக்கைகளை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. அதற்கேற்றவாறு புதிய சீட் கவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சீட் பெல்ட்கள் மஞ்சள் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

tata curvv ev In yellow

அதேபோல், காருக்குள் பிரேக், ஆக்ஸலரேட்டர் மற்றும் க்ளட்ச் பெடல்கள் ராஸோ கவர்களை பெற்றுள்ளன. கர்வ் இவி எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது க்ரீயேட்டிவ், அக்கம்ப்ளீஷ்டு, அக்கம்ப்ளீஷ்டு+, எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ என 5 விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. 45kWh மற்றும் 55kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் 45kWh பேட்டரி 502கிமீ வரையிலும், 55kWh பேட்டரி 585கிமீ வரையிலும் ரேஞ்சை வழங்கக் கூடியவைகளாக உள்ளன. அதேபோல், இதில் 45kWh பேட்டரியை பெறும் கர்வ் இவி காரில் 148 பிஎச்பி மற்றும் 215 என்.எம் டார்க் திறன் வரையிலும், 55kWh பேட்டரியை பெறும் காரில் 165 பிஎச்பி மற்றும் 215 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இது லம்போர்கினி உருஸ் காரில் வழங்கப்படும் அதே யெல்லோ சன்பர்ஸ்ட் நிறம் கிடையாது. இருப்பினும், அதற்கு கிட்டத்தட்ட இணையாக வந்துள்ளது என்றுதான் வேண்டும். டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரை எந்த நிறத்தில் பார்த்தாலும் அழகாக தான் தெரிகிறது. இது ஒருவர் வாங்கிய கர்வ் இவி காரா அல்லது ஷோரூம் டெமோ காரா என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, October 31, 2024, 12:11 [IST]
English summary
Tata curvv ev electric car in lamborghini urus yellow colour check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X