எலக்ட்ரிக் கார்களில் புது அத்தியாயம்... டாடா கர்வ் இவி ஓட்டுவதற்கு எப்படி இருக்கு? முழு ரிவியூ!

டாடா கர்வ் இவி (Tata Curvv EV), புத்தம் புதியதாக மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ள எலக்ட்ரிக் கார். டாடா மோட்டார்ஸின் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காராக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட கர்வ் இவி-க்கான முன்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.17.49 லட்சத்தில் இருந்து ரூ.21.99 லட்சம் வரையில் டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. 45kWh அல்லது 55kWh பேட்டரி உடன் இந்த புதிய டாடா எலக்ட்ரிக் காரை வாங்கலாம்.

கர்வ் இவி காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டதால், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இதற்கிடையில், இந்த எலக்ட்ரிக் காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. அதன் மூலம், புதிய கர்வ் இவி காரை பற்றி நாங்கள் அறிந்துக் கொண்ட விஷயங்களை ரிவியூவாக எல்லாருக்கும் புரியும் வகையில் தமிழில் கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் வழங்கியுள்ளோம்.

கர்வ் இவி ஆனது தற்போதைக்கு டாடா மோட்டார்ஸில் இருந்து விற்பனை செய்யப்படும் விலைமிக்க எலக்ட்ரிக் காராக விளங்குகிறது. 45kWh பேட்டரி உடன் வாங்கினால் அதிகப்பட்சமாக 150 எச்பி பவரையும், 55kWh பேட்டரி உடன் அதிகப்பட்சமாக 167 எச்பி வரையிலான பவரையும் பெறலாம். மற்றப்படி, இந்த இரு பேட்டரிகளில் எதை தேர்வு செய்தாலும் காரில் அதிகப்பட்சமாக கிடைக்கும் டார்க் திறன் 215 என்.எம் ஆகும்.

curvv ev tamil review video

ஈக்கோ, சிட்டி, ஸ்போர்ட் என மொத்தம் 3 விதமான டிரைவ் மோட்களை கர்வ் இவி காரில் பெறலாம். 55kWh பேட்டரி உடன் இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 8.6 வினாடிகளில் எட்டிவிடலாம். மேலும், இந்த 55kWh பேட்டரி உடன் கர்வ் இவி காரை வாங்கினால் சார்ஜ்ஜையும் விரைவாக நிரப்பிவிடலாம். இதற்காக காருடன் கிடைக்கும் 70 கிலோவாட்ஸ் சார்ஜரின் மூலமாக வெறும் 40 நிமிடங்களில் 10%- 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும் என்கிறது டாடா மோட்டார்ஸ்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2024, 12:49 [IST]
English summary
Tata curvv ev electric car tamil review video check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+