எதிர்கால இந்தியாவை வேற லெவலில் மாற்ற போகும் எலக்ட்ரிக் கார்... எந்த விலையில் வாங்கலாம்?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் காராக கர்வ் இவி (Curvv EV)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு கொஞ்சம் டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை போன்று இருந்தாலும், டாடா கர்வ் காரின் தோற்றம் வித்தியாசமானது ஆகும். கிரியேட்டிவ், அக்கம்ப்ளீஷ்டு, அக்கம்ப்ளீஷ்டு+ எஸ், எம்பவர்டு+ மற்றும் எம்பவர்டு+ ஏ என மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கிரியேட்டிவ் (Creative): 6 ஏர்பேக்குகள், i-VBAC உடன் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், சரிவான சாலைகளில் தானாக கார் பள்ளத்தை நோக்கி செல்வதை தடுக்கும் இபிபி உள்ளிட்டவை பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கியர்களை மாற்றுவதற்கு மற்றொரு ஆப்ஷனாக பெடில் ஷிஃப்டர்களும் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும்.

ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான டிரைவ் மோட்களை கிரியேட்டிவ் வேரியண்ட்டில் பெறலாம். இவற்றுடன், வி2வி மற்றும் வி2எல் தொழிற்நுட்பம், ஐ.ஆர்.ஏ.இவி & ஸ்மார்ட்வாட்ச் கனெக்ட்டிவிட்டி, ஸ்மார்ட் டிஜிட்டல் டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், 17-இன்ச் ஹைப்பர் ஸ்டைல் சக்கரங்கள், கேமரா & சென்சார் சார்ந்த ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட், 6 வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவையும் இந்த வேரியண்ட்டில் கிடைக்கும்.
இந்த வேரியண்ட்டில் காருக்குள் டேஸ்போர்டில் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என இரு டிஸ்பிளேக்கள் கிடைக்கும். மேலும், க்ரூஸ் கண்ட்ரோல், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ORVM-கள், 7.2 கிலோவாட்ஸ் ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் வால் பாக்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டயர்களில் காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கும் கருவி உள்ளிட்டவற்றையும் கர்வ் இவி க்ரீயேட்டிவ் வேரியண்ட்டில் பெறலாம்.

அக்கம்ப்ளீஷ்டு (Accomplished): க்ரீயேட்டிவ் வேரியண்ட்டை காட்டிலும் விலைமிக்கது என்பதால், அதில் கிடைக்கும் பெரும்பாலான வசதிகளை இந்த வேரியண்ட்டில் பெறலாம். அத்துடன் கூடுதலாக, கூல்டு க்ளோவ் பாக்ஸ், லெதரேட்டட் அப்ஹோல்ஸ்ட்ரீ மற்றும் அலெக்ஸா வாய்ஸ் உதவி உள்ளிட்டவையும் அக்கம்ப்ளீஷ்டு வேரியண்ட்டில் கிடைக்கும். ஹெட்லேம்ப்கள் இந்த வேரியண்ட்டில் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்களாக கிடைக்கும்.
காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட்களை இணைக்கும் விதத்திலான லைட் பாரை இந்த வேரியண்ட்டில் இருந்துதான் பெற முடியும். இண்டிகேட்டர்கள் சதுர வடிவத்திலும், ஃபாக் விளக்குகள் கார்னரிங் ஃபங்க்சன் உடனும் கிடைக்கும். அலாய் சக்கரங்களில் ஏரோ இன்சர்ட்களை பெறலாம். இண்டோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கான திரைகள் சற்று பெரியதாக 10.25 இன்ச்சில் கிடைக்கும். மேலும், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி வசதி ஆனது வயர்லெஸ் ஆக வழங்கப்படும்.

அக்கம்ப்ளீஷ்டு+ எஸ் (Accomplished+ S): அக்கம்ப்ளீஷ்டு வேரியண்ட்டில் கிடைக்கும் வசதிகளுடன் டிரைவர் பிளைண்ட் ஸ்பாட் மானிடரை கொண்ட 360-டிகிரி கேமரா, காரை முன்பக்கமாக பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள், பனோராமிக் சன்ரூஃப், ஆர்கேட்.இவி மொபைல் செயலி, ஜேபிஎல் சவுண்ட் மோட்கள், வயர்லெஸ் மொபைல் போன் சார்ஜிங் வசதி, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் உள்ளிட்டவற்றை இந்த வேரியண்ட்டில் பெறலாம்.
எம்பவர்டு+ (Empowered+): கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டான இதில், சார்ஜிங் இண்டிகேட்டர் உடன் ஸ்மார்ட் டிஜிட்டல் விளக்குகள், காருக்குள் வண்ண விளக்குகள், மூட் லைட்டிங் உடன் குரல் மூலமாக கட்டுப்படுத்தக்கூடிய பனோராமிக் சன்ரூஃப், இன்னும் சற்று பெரியதாக 12.3 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் (சப் வூப்பர் உடன்) உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக கிடைக்கும்.
இவற்றுடன், பாதசாரிகளை எச்சரிக்கும் விதமாக காரில் இருந்து போலியான சத்தம் (எலக்ட்ரிக் கார் என்பதால்), ஏக்யூஐ டிஸ்பிளே உடன் காற்று சுத்திகரிப்பான், தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய IRVM, வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 2 விதமாக மடக்கக்கூடிய 2வது வரிசை இருக்கைகள், காருக்கு முன்பக்கத்தில் பொருட்களை வைக்க இடவசதி உள்ளிட்டவையும் கிடைக்கும்.
எம்பவர்டு+ ஏ (Empowered+ A): எம்பவர்டு+ வேரியண்ட்டில் கிடைக்கும் வசதிகளுடன் லெவல்-2 அடாஸ், சைகை மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய பவர்டு டெயில்கேட், காரை ஸ்டார்ட் செய்யும் பொத்தானை 5 முறை அழுத்தினால் அவசரகால உதவியை பெறும் வசதி உள்ளிட்டவற்றை இந்த வேரியண்ட்டில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் டாடா கர்வ் இவி இணைவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. ஏனெனில், விலையுயர்ந்த கார்களை மிஞ்சும் அளவிற்கு கர்வ் இவி வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்வ் இவி காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் கூட நிறைய மாடர்ன் வசதிகளை பெறலாம் என்பது உண்மையில் அருமையான விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications









