இது டாடா காரா இல்ல சொகுசு கப்பலா.. மார்க்கெட்டை ஒரு வழி பண்ண போகுது! இதுக்குதான் எல்லாரும் வெயிட்டிங்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) வெகு விரைவில் கரவ் (Curvv) எனும் புதுமுக கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த புதுமுக கார் மாடல் ஐசிஇ (ICE) மற்றும் மின்சாரம் (EV) என இரண்டு விதமான அவதாரங்களிலும் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வெளியீட்டை சமீபத்திலேயே டாடா மோட்டார்ஸ் அரங்கேற்றியது. மேலும், ஆகஸ்டு 7 ஆம் தேதி அன்றே இதன் அதிகாரப்பூர்வ விற்பனைத் தொடங்கப்பட இருக்கின்றது. அதேவேளையில், முதலில் கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் மாடலையே டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, விரைவில் ஐசிஇ வெர்ஷன் கர்வ்-ம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த நிலையிலேயே புதுமுக கர்வ் கார் பற்றிய சில முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. விற்பனைக்கு வர இருக்கும் டாடா கர்வ் காரின் நிஜ உலக மாடலின் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் கசிந்தன.

இந்த படத்தின் வாயிலாகவே இந்த காருக்குள் இடம் பெற இருக்கும் சில முக்கிய அம்சங்கள் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. டாடாவின் முக்கிய தயாரிப்புகளான நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களின் உட்பக்கத்தைப் பார்ப்பதைப் போலவே கர்வ் காரின் உட்பக்கமும் உள்ளது.
அந்தவகையில், 12 அங்குல ஹர்மேன் கர்டோன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, அர்கேட்.இவி மற்றும் 15க்கும் மேற்பட்ட ஓடிடியை சப்போர்ட் செய்யும் வசதியையும் இந்த திரையில் டாடா வழங்கி இருக்கின்றது.

மேலும், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்தையும் இந்த கார் மாடலில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. இதுதவிர, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் லைட் வசதிக் கொண்ட பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றுடன் சேர்த்து, பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர் பேக்குகள், முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிர, ஆட்டோ ஹோல்டு ஃபங்க்சன் வசதிக் கொண்ட எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவையும் இடம் பெற இருக்கின்றன.
மேலும், ஐஆர்ஏ 2.0 இணைப்பு அம்சம் மற்றும் லெவல் 2 அடாஸ் அம்சம் ஆகியவையும் இந்த காரில் இடம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, இந்த காரை குளோபல் என்சிஏபி (GNCAP) மற்றும் பாரத் என்சிஏபி (BNCAP) ஏற்கனவே மோதல் ஆய்விற்கு உட்படுத்தி விட்டதாகவும், இந்த ஆய்வில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவர்கள் பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
இது உறுதியான தகவல் என்றும் விரைவில் இதுபற்றிய மேலும் விபரங்களை டாடா மோட்டார்ஸ் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா கர்வ் இவி காரில் இன்னும் பல அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகையால், இதன் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கின்றது.
அந்தவகையில், ரூ. 18 லட்சம் முதல் ரூ. 24 வரையில் அதன் விலை இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதன் அதிகாரப்பூர்வ விலை விபரம் ஆகஸ்டு 7 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், டாடா கர்வ் இவி விற்பனைக்கு வரும் எனில் எம்ஜி இசட்எஸ் இவி, மஹிந்திரா எகஸ்யூவி 400 இவி, பிஒய்டி அட்டோ 3 மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாய் கிரெட்டா இவி ஆகியவற்றிற்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா கர்வ் கார் மாடலுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்கள் கசிந்துள்ளன. இதன் வாயிலாக இந்த கார் மாடலின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்கு அதிகரிக்கச் செய்திருக்கின்றது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








