வெளிநாட்டுக்காரங்க பாத்து பொறாமபட போறாங்க.. இந்தியாவே காத்து கெடக்கும் காருக்கு புக்கிங் தொடங்கியது!
கார் பிரியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors)இன் கர்வ் (Curvv) கார் மாடல் இருக்கின்றது. இந்த காரை டாடா மோட்டார்ஸ் எரிபொருள் மற்றும் பேட்டரி என இரண்டு அவதாரங்களிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதாவது, கர்வ் ஐசிஇ மற்றும் கர்வ் இவி என தனி தனி வாகன மாடலாக அது விற்பனைக்கு வர உள்ளது. இது ஓர் எஸ்யூவி கூபே ரக கார் மாடல் ஆகும். டாடா நிறுவனத்தின் மிக மிக கவர்ச்சியான தோற்றம் கொண்ட கார் மாடலாகவும் இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.
இவற்றின் அறிமுக தேதியை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்திவிட்டது. வருகின்ற ஆகஸ்டு 7 ஆம் தேதி அன்றே இந்த கார் மாடல்கள் நாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அன்றைய தினத்திலேயே அதிகாரப்பூர்வமாக இக்காருக்கான புக்கிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பலரும் இந்த நாளுக்காகவே தற்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஒரு சில டாடா கார் விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்கை கர்வ் இவி-க்கு தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவே முதலில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. கர்வ் ஐசிஇ வெர்ஷன் விற்பனை சற்று தாமதாகவே தொடங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் முன்னரே கர்வ் இவி-க்கு புக்கிங் தொடங்கி இருப்பது டாடா கார் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ரூ.11 ஆயிரம் முன் தொகையில் காருக்கான புக்கிங்கை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஸ்டைல் மற்றும் லுக் ஆகியவற்றைப் பொருத்த வரை இரண்டு கார் மாடல்களும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும்.
அதேவேளையில், இரண்டையும் வேறுபடுத்தக் கூடிய அம்சங்கள் சிலவும் இவற்றில் எதிர்பார்க்கலாம். அந்தவகையில் கர்வ் இவி-யில் தனித்துவமான பேட்ஜ்கள் சில எதிர்பார்க்கலாம். உதாரணமாக இவி என்கிற பேட்ஜை இந்த காரில் எதிர்பார்க்கலாம். இதுதவிர, இன்னும் பல மாற்றங்களையும் இந்த காரில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் வாகன ஆர்வலர்கள்.
டாடா மோட்டார்ஸ் தன்னுடைய புகழ்பெற்ற கார் மாடல்களான நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி இவை மூன்றிலும் வழங்கி இருக்கும் அம்சங்களை இந்த காரிலும் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், இந்த மூன்று கார் மாடல்களிலும் இடம் பெற்றிருக்கக் கூடிய மெல்லிய எல்இடி லைட்டுகளை இந்த காரிலும் எதிர்பார்க்கலாம்.
இதேபோல், காருக்குள் வழங்கப்படும் அம்சங்களிலும் இந்த மூன்று கார் மாடல்களுடன் கர்வ்.இவி ஒத்துப்போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, நெக்ஸான்.இவி உடன் இந்த கார் மிகப் பெரிய அளவில் ஒத்துப்போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இத்துடன் தனித்துவமான அம்சங்களாக முழுமையாக மூடப்பட்ட கிரில், கவர்ச்சியான பம்பர் மற்றும் வித்தியாசமான அலாய் வீல் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதைத்தொடர்ந்து, கரவ் இவி மற்றும் கர்வ் (ஐசிஇ) இரண்டிலும் 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி உடனும், 10.25 அங்குல டிரைவருக்கான திரை, பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை உள்ளிட்ட அம்சங்களும் இந்த கார்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதுதவிர பாதுகாப்பு அம்சமாக அடாஸ், ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹில் ஹோல்டு மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய அம்சங்களும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
தொடர்ந்து, முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார், மும்முனை பாயிண்ட் சீட் பெல்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவை கர்வ் கார் மாடலில் இடம் பெற இருக்கின்றன. இந்த காரில் என்ன மாதிரியான பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கர்வ் இவி ஓர் முழு சார்ஜில் 600 கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய காராக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக இது உறுதிப்படுத்தப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக இக்கார் பற்றிய அனைத்து தகவல்களும் வரும் ஆகஸ்டு 7 ஆம் தேதி அன்றே நமக்கு தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








