சரிந்து போன டாடா சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்த வரும் எலெக்ட்ரிக் கார்... இதுக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்...
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முதல் இடத்தில் இருந்து வரும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ். தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் இவி, டாடா பன்ச் இவி, டாடா டியாகோ இவி மற்றும் டாடா டிகோர் இவி என மொத்தம் 4 எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்த வரிசையில் 5வது எலெக்ட்ரிக் காராக டாடா கர்வ் இவி விற்பனைக்கு வரவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார், நடப்பு 2024ம் ஆண்டின் 2வது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா கர்வ் எலெக்ட்ரிக் காரில், பல்வேறு வசதிகள் வழங்கப்படவுள்ளன. இதில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், லெவல் 2 அடாஸ், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை மிகவும் முக்கியமான வசதிகளாக இருக்கலாம்.

இவை எல்லாம் தவிர, தனித்துவமான 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும், டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது Acti.ev Platform அடிப்படையில் உருவாக்கப்படவுள்ள 2வது எலெக்ட்ரிக் கார் ஆகும்.
முன்னதாக தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார், இதே பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதற்கு அடுத்தபடியாக டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில், இந்த பிளாட்பார்ம் பயன்படுத்தப்படவுள்ளது.

டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரில், 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக ரேஞ்ச் வழங்க கூடிய பேட்டரி ஆப்ஷன் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை, சிறிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த சரிவில் இருந்து மீளும் வகையில், இந்திய சந்தையில் கர்வ் எலெக்ட்ரிக் காரை இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டாடா கர்வ் காரானது, எலெக்ட்ரிக் காராக மட்டும் விற்பனை செய்யப்பட போவதில்லை. மாறாக ஐசி இன்ஜின் உடனும் விற்பனை செய்யப்படவுள்ளது. முதலில் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. அதை தொடர்ந்து ஒரு சில மாதங்களில் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV), மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) மற்றும் சிட்ரோன் பசால்ட் இவி (Citroen Basalt EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக, டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆனால் நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள 3 எலெக்ட்ரிக் கார்களில், எதுவுமே இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இவை அனைத்துமே ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரவுள்ளன. இந்த 3 எலெக்ட்ரிக் கார்களில், ஹூண்டாய் க்ரெட்டா இவி மற்றும் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் ஆகியவை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications








