காரா இல்ல கப்பலா? டாடா கர்வ் இவி கார் அறிமுகம்! விலையை கேட்டா உடனே வாங்கிடுவீங்க!
டாடா நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கர்வ் என்ற கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 17.49 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. டாடாவின் இந்த காரை மிக நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த அறிமுகம் மக்களுக்கு விருந்தாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நிலையில், இந்நிறுவனம் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களில் உருவாக்கப்பட்ட கார்களை தான் எலெக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றி விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் எலெக்ட்ரிக் மெஷினுக்காக பிரத்தேகமாக காரை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கில் டாடா கர்வ் என்ற எலெக்ட்ரிக் கூப்பே ஸ்டைல் எஸ்யூவி கார் ஒன்றை உருவாக்கி கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதன் முதலில் காட்சிப்படுத்தியது.

இந்நிலையில் இந்த காரில் பல்வேறு விதமான அப்டேட்கள் மற்றும் மாற்றங்களை செய்து வந்த டாடா நிறுவனம், இதில் கம்பஷன் இன்ஜின் பொருத்தப்பட்ட காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக டாடா நிறுவனம் தனது கர்வ் என்ற எலெக்ட்ரிக் வெர்ஷன் காரை இன்று பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
நாம் முன்னரே சொன்னது படி இது ஒரு கூபே ஸ்டைல் எஸ்யூவி ரக காராகும். இதனால் இதன் டிசைன் போல்டாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கான்செப்ட் வெர்ஷனில் எப்படியான லுக் இருந்ததோ அதே லுக் தான் இறுதிக்கட்ட டிசைனிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பக்கம் எல்இடி லைட் பார் வழங்கப்பட்டுள்ளது. இது வாகனத்தின் முழு அகலத்திற்கும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபோக இந்த காரின் முன் பக்கத்தில் ஸ்ட்ராங்கான ஸோல்டர் லைன் மற்றும் பெரிய வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது இது ஒரு கூபே ஸ்டைல் எஸ்யூவி கார் என்பதால் ஸ்லோப்பான ரூப் லைன் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த காரின் பின்பகுதி கொஞ்சம் சிறியதாகவே இருக்கும். எஸ்யூவி கார் லுக்கில் இருந்தாலும், இன்னொரு பக்கம் செடான் காரின் லுக்கும் இந்த காருக்கு கிடைக்கும்.
மற்றொரு முக்கிய அப்டேட்டாக இந்த காரில் ஃபிளாஷ் டோர் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோக ரூப் டாப்பில் பொருத்தப்பட் ஸ்பாய்லர்கள், கனெக்டெட் எல்இடி டெயில் லைட் மற்றும் டிஃப்யூசர்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும்போது பலரை ஈர்க்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் வடிவமைப்பிற்காக அட்லெஸ் என்ற புதிய ஆர்க்கிடெக்ஷரை பயன்படுத்தியுள்ளது. டாடா கார்கள் வழங்க்கமாக ஸ்டிராங்காக வடிவமைக்கும். அதன்படி இந்த காரும் ஸ்டிராங்காக வடிவைமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாரத் என்கேப் சோதனையில் இந்த கார் 5 ஸ்டார்களை பெறும் அத்தனை தகுதிகளையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்பகுதியில் 12.3இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம், டிராபிஸோடினல் ஏசி வெட்டுகள், ஃபாக்ஸ் கார்பன் பைபர் டேஷ் போர்டுகள், சிவப்பு நிற ஆம்பியன்ஸ் லைட்டிங், ஆட்டோ டிம்மிங் அம்சம் கொண்ட ஐஆர்விஎம். நான்கு ஸ்போர்க்கு கொண்ட ஸ்டேரிங் வீல்கள் அதன் நடுவே இலுமினேட் செய்யப்பட்ட டாடா லோகோ, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பெடல் ஸ்விஃப்டர் ஆகிய அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த காரில் மொத்தம் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 45 கிலோ வாட் ஹவர் குறைந்தபட்ச பேட்டரி ஆப்ஷனாகவும், 55 கிலோ வாட் ஹவர் அதிகபட்ச பேட்டரி ஆப்ஷனாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் 125 கிலோ வாட் லிக்யூட் கூல்டு பெர்மனென்ட் சிங்க்ரனைஸேஷன் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் சிறப்பான ஃபெர்பார்மென்ஸை வழங்குகிறது.
இந்த மூலம் இந்த கார் 45 கிலோ வாட் ஹவர்பேட்டரியில் 502 கி.மீ ரேஞ்சையும், 55 கிலோ வாட் ஹவர் பேட்டரியில் 585 கிலோ மீட்டர் ரேஞ்சையும் வழங்கும் என தெரிவித்துள்ளது. இது பி1 ரேஞ்ச் தான். ரியல் வேல்டில் இந்த கார் எவ்வளவு ரேஞ்ச் தரும் என அறிந்து கொள்ள டாடா நிறுவனம் 75 சதவீதமான மக்கள் எப்படி பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கிட்டது.
அதை சி75 ரேஞ்ச் என வெளியிட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 45 கிலோ வாட் ஹவர் பேட்டரி வெர்ஷன் 330-350 ரேஞ்சையும் 55 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் 400-425 கிலோ மீட்டர் ரேஞ்சையும் தரும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் டாடா நிறுவனம் தனது மற்ற தயாரிப்புகளுக்கும் சி75 ரேஞ்ச் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
இந்த காரின் பேட்டரி 70 கிலோ வாட் சர்ஃஜருக்கு மேல் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் போட்டால் 10-80 சதவீத சார்ஜை 40 நிமிடத்தில் நிரப்பிவிடும்.மேலும் இந்த காரில் விடூஎல் மற்றும் விடுவி ஆகிய சார்ஜிங் ஆப்ஷன்களும் உள்ளன. இதனால் நீங்கள் தனியாக லோடு மூலம் காரை சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். அல்லது வேறு காரில் உள்ள காரை இந்த காருக்கு மாற்றிக்கொள்ளும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரை 15 நிமிடம் சார்ஜ் போட்டாலே 150 கிமீ ரேஞ்ச் கிடைக்கும்.இந்த காரின் ஃபெர்பார்மென்ஸை பொருத்தவரை 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.6 நொடியில் பிக்கப் செய்துவிடும். அதே நேரம் அதிகபட்சமாக 160 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பல்வேறு விதமான தனித்துவமான பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் 18 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.இந்த காரின் எடை 50:50 என சரியாக பிரிவு செய்யப்பட்டபடி வடிவைமக்கப்பட்டுள்ளது. இந்த கார் 450 மிமீ உயரம் தண்ணீர் இருக்கும் போது அதற்குள் பாதுகாப்பாக பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் 20 அம்சங்கள் கொண்டா அடாஸ் லெவல் 2 தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 20க்கும் அதிகமான ஆப்களை கொண்டதாக இருக்கிறது.மேலும் இது 9 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் வாய்ஸ் அசிஸ்ட் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொது இடங்களில் உள்ள சார்ஜர்களை கண்டறியும் தொழிற்நுட்பத்தையும் உட்புகுத்தியுள்ளது.
இந்த டாடா கர்வ் இவி கார் மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கிரியேட்டிவ், அக்கம்பிளஷ்டு, அக்கம்பிளஷ்டு +எஸ், எம்பவர்டு, எம்பவர்டு+ஏ ஆகிய வேரியண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த கார் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தகுந்த காரை தேர்வு செய்து கொள்ள முடியும்.
இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ17.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. இதன் டாப் வேரியண்ட் ரூ21.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. இந்த காிரன் விலை இந்தியாவில் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி ஆட்டோமெட்டிக் வேரியண்ட் காரின் விலைக்கு போட்டியாக குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் ஆகஸ்ட் 12ம் தேதி டாடா டீலர் ஷிப்களில் துவங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக நீண்ட நாட்களாக இந்த காருக்கான வருகைக்காக பலர் காத்திருந்த நிலையில் இந்த கார் பெட்ரோல், டீசல் இன்ஜின் காரின் விலையில் எலெக்ட்ரிக் காராக அறிமுகமாகியுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த காருக்கான விலை மற்றும் புக்கிங் அறிவிப்புகள் வெளியானதால் பலர் இந்த காரை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








