இந்த காரை மட்டும் வாங்கிடாதீங்க.. ஊரு கண்ணே உங்க மேல பட்டுவிடும்! நாளை அறிமுகமாகிறது டாடா கர்வ்!
ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் காத்துகிடக்கும் டாடா கர்வ் இவி (Tata Curvv EV) நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி கூபே (SUV coupe) வகை கார் மாடல் ஆகும். மேலும், இது மின்சாரத்தில் இயங்கும் திறன் கொண்டது என்பது அதன் தனி சிறப்பாகும். இதே கார் மாடலை ஐசிஇ (ICE) வெர்ஷனிலும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதனை டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
ஆனால், முதலில் இந்தியாவில் அதன் எலெக்ட்ரிக் அவதாரமே விற்பனைக்கு வர இருக்கின்றது. ஐசிஇ பதிப்பிற்காக வருகின்ற செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போதே அதே டாடா விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே நாளை அறிமுகமாக இருக்கும் டாடா கர்வ் இவி பற்றிய பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, டாடா கர்வ் இவி-யின் ரேஞ்ஜ் மீதான எதிர்பார்ப்பு மிகவும் பலமாக உள்ளது. இதுபற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா கர்வ் இவி தனித்துவமான உடல் அமைப்பைக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், அது நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளை பிரதிபலிக்க தவறவில்லை. அந்தவகையில், டாடாவின் மற்ற முக்கிய எலெக்ட்ரிக் கார் மாடல்களான நெக்ஸான்.இவி மற்றும் பஞ்ச்.இவி ஆகியவற்றையே லேசாக இது பிரதிபலிக்கின்றது. லைட் உள்ளிட்ட விஷயங்களிலேயே கர்வ் இவி மற்றவற்றுடன் ஒத்துப் போகின்றது.
இணைக்கப்பட்ட பகல்நேரத்தில் இயங்கும் எல்இடி லைட்டே (டிஆர்எல்) இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது வரவேற்பு மற்றும் குட்-பை அனிமேஷனை செய்யும் வசதிக் கொண்டது ஆகும். இதே சிறப்பையே பின் பக்க லைட்டும் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர இன்னும் சில தனித்துவமான அம்சங்களையும் இந்த காரில் நம்மால் காண முடிகின்றது.
ரூஃப்லைன், ஃப்ளஷ் வகை கதவு கைப்பிடிகள் ஆகியவை அதில் அடங்கும். மேலும், காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக அழகிய அலாய் வீல்கள் மற்றும் எஸ்யூவி தோற்றத்திற்கு வலுசேர்க்கும் விதமாக சாய்வான கூரை ஆகியவற்றையும் கர்வ் இவி கொண்டிருக்கின்றது. இந்த அம்சங்களே கர்வ் காருக்கு முற்றிலும் மாறுபட்ட லுக்கை சாலையில் வழங்க இருக்கின்றன.
வெளிப்புறத்தில் மட்டும் இல்லைங்க இந்த காரின் உள்பக்கமும் மிகவும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு உள்ளன. இதற்கேற்ப டாடா கர்வ் இவி-யின் டேஷ்போர்டு டூயல் டோன் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது தெரிய வந்து உள்ளது.
தொடர்ந்து, ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் இடம் பெற்றிருப்பதைப் போல 4ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் டச் வசதிக் கொண்ட காலநிலைக் கட்டுப்பாட்டுப் பேனல் ஆகியவையும் கர்வ் இவியில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இதுதவிர, கூடுதல் அம்சங்களாக பனோரமிக் சன்ரூஃப், 12.3அங்குல ஃப்ரீ ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் ஆகியவை இந்த காரில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, பன்முக டிரைவிங் மோட்களுக்கான கன்ட்ரோலர் மற்றும் நெக்ஸானில் இருப்பதைப் போன்ற ஒரு ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்டர் ஆகியவையும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றது. இந்த அம்சங்கள் லக்சூரி பயணத்துடன் சேர்த்து நவீன மயமான டிராவல் அனுபவத்தை வழங்கும். இதேபோல், அதிக இந்த காரில் அதீத பாதுகாப்பும் கிடைக்கும் என தெரிகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி பார்வை திறன் கேமிரா மற்றும் மேம்பட்ட டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் (ADAS) ஆகியவையும் இந்த காரில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் மோதல் எச்சரிக்கை ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே பாதுகாப்பான டிராவல் என்பது கட்டாயம் கிடைக்கும். இந்த கார் அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 500 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் நம்பப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களே தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது நாளைய தினமே உறுதிச் செய்யப்பட இருக்கின்றது.
இதேபோல் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படலாம் என தெரிகின்றது. கூடுதல் சிறப்பு வசதியாக இந்த காரில் வி2வி (V2V) மற்றும் வி2எல் (V2L) எனும் அம்சத்தை டாடா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, காரில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருட்களுக்கு மின்சாரத்தை எடுத்துக் கொள்வது மற்றும் காரில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மின்சாரத்தை எடுத்துக் கொள்வது அவையே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று இன்னும் ஏராளமான சிறப்பு வசதிகள் டாடா கர்வ் இவி காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்த கார் என்ன மாதிரியான சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வரும் என்பது நாளையே அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். இந்தியாவில் இப்போதே இந்த காருக்கு பலமடங்காக எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே விற்பனையிலும் இந்த கார் சக்கைப்போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








