எவ்ளோ வேணாலும் பெட் கட்டலாம்... டாடாவோட இந்த எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டையே ஒரு கலக்கு கலக்க போகுது...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா கர்வ் இவி (Tata Curvv EV). இது இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 5வது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். முன்னதாக டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) ஆகிய 4 எலெக்ட்ரிக் கார்களை டாடா விற்பனை செய்து வருகிறது.

இந்த வரிசையில் விற்பனைக்கு வரவுள்ள டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வமான டீசரை (Official Teaser) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வமான டீசர் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

Tata Curvv EV

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிறிய டீசர் வீடியோ (Teaser Video), டாடா கர்வ் இவி மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. டாடா கர்வ் காரானது, எலெக்ட்ரிக் மற்றும் ஐசி இன்ஜின் (IC Engine) என 2 வெர்ஷன்களிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

இதில், எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்போது டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு சில மாதங்களில் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில், டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம்.

Tata Nexon EV

அதை தொடர்ந்து ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வசதிகளை பொறுத்தவரையில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 12 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு அம்சமும் டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை எல்லாம் தவிர, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில் 50kWh அல்லது அதற்கும் மேலான திறன் கொண்ட பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம். இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 400-450 கிலோ மீட்டர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது 'ரியல் வேர்ல்டு டிரைவிங் ரேஞ்ச்' என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே ஒரு முறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், உறுதியாக 400-450 கிலோ மீட்டர்கள் தூரம் வரை பயணம் செய்ய முடியும் என நாம் எதிர்பார்க்கலாம். இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் வரவுள்ள டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கைதான் தற்போது ஓங்கியுள்ளது. இந்த சூழலில் விற்பனைக்கு வரவுள்ள கர்வ் இவி எலெக்ட்ரிக் கார், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2024, 20:20 [IST]
English summary
Tata curvv ev official teaser expected price driving range
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+