ஒரு கிமீ பயணிக்க ஒரு ரூபாய் தான் செலவாகும்! டாடா கர்வ் இவி காரை வாங்குனா இவ்வளவு லாபம் இருக்குதா?
டாடா நிறுவனம் இன்று கர்வ் என்ற தனது கூபே ஸ்டைல் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 17.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த காருக்கான புக்கிங்கும் 18ம் தேதி துவங்க உள்ள நிலையில் கம்பஷன் இன்ஜின் கார்களை வாங்குவதைவிட இந்த எலெக்ட்ரிக் காரை வாங்குவதுதான் லாபமாக இருக்கும் என்ற பேச்சு தற்போது அடிபட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் நீண்டு நாட்களாக மக்கள் எதிர்பார்த்த கர்வ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஒரு கூபே ஸ்டைல் காராகும் இந்த காரின் வருகைக்காக நீண்ட ஆண்டுகளாக மக்கள் காத்திருந்தார்கள். கடந்த 2022ம் ஆண்டு இந்த கார் முதல் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்பொழுது முதல் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

இந்த கார் இந்தியா மார்க்கெட்டில் ரூ17.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து அதிகபட்சமாக ரூபாய் 21.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த விலையில் இந்த காரை அறிமுகப்படுத்தும்போது டாடா நிறுவனத்தின் தரப்பில் இருந்து சொல்லப்பட்ட விஷயம் மற்ற மிட் சைஸ் எஸ்யூவி கம்பஷன் இன்ஜின் கார்களை வாங்குவதைவிட இந்த எலெக்ட்ரிக் காரை வாங்குவது லாபமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த விலையில் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விலையை அறிவிக்கும் முன் டாடா நிறுவனம் சில தரவுகளையும் வெளியிட்டுள்ளது. இந்த தரவுகள் பல ஆச்சரியமான தகவல்களை கொண்டதாக இருக்கின்றன. இந்தியாவில் விற்பனையாகவும் மிட்-சைஸ் கம்பஷன் இன்ஜின் கார்களில் விலையை பொருத்தவரை ரூபாய் 18. 69 முதல் ரூபாய் 20.88 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்த கார்கள் எல்லாம் விற்பனையாகி வருகின்றன என கூறப்பட்டது.

மேலும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் டாப் வேரியண்ட் கார்களை பொறுத்தவரை ரூ 23.84 லட்சம் முதல் ரூ24.30 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருவதாக கூறப்பட்டது. இந்த விலையெல்லாம் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட கார்களின் விலை தான். மேனுவல் கியர் ஆப்ஷன் கொண்ட கார்களின் விலை இதில் ஒப்பிடப்படவில்லை.
டாடா நிறுவனத்தின் கர்வ் இவி காரும் ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் தான். அதனால் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் கார்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டாடா கர்வ் காரும் ஒரு ஆப்ஷனாக இருக்கிறது. இப்படியாக ஒப்பிடும்போது வாடிக்கையாளர்கள் டாடா கர்வ் காரை தேர்வு செய்யவே அதிகமான வாய்ப்பு இருப்பதாக டாடா நிறுவனம் கருதுகிறது.

இதற்கு முக்கியமான காரணம் மார்க்கெட்டில் உள்ள டாடா கர்வ் காருக்கு போட்டியாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விலையை விட இந்த எலெக்ட்ரிக் காரின் விலை குறைவாக இருக்கிறது. இதனால் விலையை அதிகம் கணக்கிடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அது மட்டுமல்ல அம்சங்களை ஒப்பிடும்போது மார்க்கெட்டில் உள்ள மற்ற கார்களின் இருக்கும் அம்சங்களை விட இந்த காரில் ஏராளமான அம்சங்கள் உள்ளது.
இதை விட மிக முக்கியமாக இருப்பது காரின் ரன்னிங் காஸ்ட் தான். சாதாரண கம்பஷன் இன்ஜின் கார்களை பயன்படுத்துவதற்காகவும், செலவையும் இந்த எலெக்ட்ரிக் காரை பயன்படுத்த ஆகும் செலவையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒப்பிட்டு பார்க்கும்போது எலெக்ட்ரிக் கார்களை கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் செலவில் ஆப்ரேட் செய்து விட முடியும். ஆனால் கம்பஷன் இன்ஜின் கார்களை அப்படி செய்ய முடியாது.
இதனால் நீங்கள் மிட்-சைஸ் எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்த செலவில் காரும் கிடைக்கும் அதே நேரம் எரிபொருள் செலவு குறைவாக இருக்கும் வகையிலான காராகவும் இந்த டாடா கர்வ் கார் இருக்கும். இந்த நோக்கத்திற்காகவே இந்த விலையை டாடா நிறுவனம் குறைவான விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்த காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஒரு சில தயக்கம் காட்டுவதற்கு அதன் விலை அதிகமாக இருப்பது காரணமாக சொல்லப்பட்டது. அந்த பிரச்சனையை சரி செய்து டாடா நிறுவனம் தற்போது மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









