லக்சரி கார்கள் தோற்றுப்போகும்... டாடா உருவாக்கியுள்ள புதிய கார் - பின்கதவை திறந்தால் காத்திருக்கும் அதிசயம்!!
டாடா கர்வ் (Tata Curvv) இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 7) அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா மோட்டார்ஸின் புதிய கூபே ஸ்டைலிலான எஸ்யூவி கார். பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமல்லாமல், எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரும் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில், புதிய கர்வ் இவி கார் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் அப்படி என்னென்ன விஷயங்கள் காட்டப்பட்டுள்ளன என்பதை பற்றியும், புதிய கர்வ் இவி எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் சமீப காலங்களில் நெக்ஸான், பஞ்ச் போன்ற கார்கள் மூலமாக குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றியை கண்டுள்ளது. அந்த வரிசையில், டாடா களமிறக்கும் புதிய எஸ்யூவி கார் தான், கர்வ் ஆகும். நெக்ஸான், பஞ்ச் போன்று இல்லாமல், கூபே ஸ்டைலிலான எஸ்யூவி காராக டாடா பஞ்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டதை போன்று, டாடா கர்வ் கார்கள் இன்று (ஆகஸ்ட் 7) மதியம் 11:30 மணியளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. கர்வ் கார்களை பற்றிய விபரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும், இந்த கார்களில் வழங்கப்பட உள்ள என்ஜின் ஆப்ஷன்கள், பேட்டரி & எலக்ட்ரிக் மோட்டாரின் திறன்கள் மற்றும் காரின் விலைகள் அறிவிக்கப்பட வேண்டியதுதான் பாக்கி உள்ளது.
இந்த நிலையில், டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் ஒன்று பொது இடத்தில் காட்சி தந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் என்ன மாதிரியான எலக்ட்ரிக் டெயில்கேட் வழங்கப்பட உள்ளது என்பது காட்டப்பட்டுள்ளது. அத்துடன், காரின் உட்பக்க கேபினும் இந்த வீடியோவில் நெருக்கமாக காட்டப்பட்டுள்ளது.

கண்ணை கவரக்கூடிய நீல நிறத்தில் இந்த வீடியோவில் காட்சித்தரும் கர்வ் இவி காரை சாலையொன்றின் ஓரத்தில் நிறுத்தி, அதன் எலக்ட்ரிக் டெயில்கேட் ஃபங்க்சனை செய்து காட்டியுள்ளனர். முதலில், பொருட்களை வைப்பதற்கான இந்த காரின் பெரிய அளவிலான பூட் ஸ்பேஸ் பகுதியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். கூபே-ஸ்டைல் கார் என்பதால், பின்கதவு நன்கு அகலமாக வாயை விரிக்கிறது.
இந்த கதவை மூடிவதற்கு பொத்தான் ஒன்று வழங்கப்பட்டுள்ளதை வீடியோவில் பிரஸ் செய்து காட்டியுள்ளனர். புதிய கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள் இரண்டும் எல்இடி லைட் பார் மூலமாக இணைக்கப்பட்டு உள்ளதை தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காண முடிகிறது. எலக்ட்ரிக் கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் 'கர்வ்.இவி' முத்திரை ஆங்கிலத்தில் காரின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டு உள்ளதை காணலாம்.

காருக்குள் செல்வதற்கு, பறித்து இழுக்கக்கூடிய கைப்பிடிகள் கதவுகளில் வழங்கப்பட்டுள்ளன. இந்த கர்வ் இவி காருக்கு உள்ளே டாடாவின் புதிய டிசைனிலான ஸ்டேரிங் சக்கரம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேரிங் சக்கரத்திற்கு மத்தியில், டாடா மோட்டார்ஸின் லோகோ ஒளிரக்கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு கிடைத்துள்ள வீடியோவில், டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் புதிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை காண முடிகிறது.
நெக்ஸானை காட்டிலும் விலைமிக்கதாக, டாடா ஹெரியரை காட்டிலும் விலை குறைவானதாக கொண்டுவரப்படும் கர்வ் காரில் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், பெடில் ஷிஃப்டர்கள், மல்டி-மோட் ரீஜெனரேஷன், ரியர் ஏசி வெண்ட்ஸ், லெவல்-2 அடாஸ், 360-டிகிரி கேமரா, 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெக்ஸான் பெட்ரோல்/ டீசல் காருக்கு பின் நெக்ஸான் இவி காரை சில வருடங்களுக்கு பின்பே டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. ஆனால், கர்வ் இவி காரை உடனடியாக டாடா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இதில் இருந்து, கர்வ் கார்கள் மீது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. அதற்கு ஏற்றாற்போல், கர்வ் இவி எலக்ட்ரிக் காரை செம்ம ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்த வீடியோவில் காண முடிகிறது.


Click it and Unblock the Notifications









