டாடா கர்வ் இவி கார் வாங்க முடிவு பண்ணிட்டீங்களா? இது தெரியாம ஷோரூம் பக்கம் போயிடாதீங்க!
டாடா நிறுவனம் இன்று கர்ன் என்ற எலெக்ட்ரிக் கூப்பிட்டு எஸ்யூவி காரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 17.49 லட்சம் என்ற விலைக்கு அறிமுகமாகியுள்ள நிலையில், இந்த காரில் உள்ள வேரியண்ட்கள் எத்தனை? ஒவ்வொரு வேரியண்டிலும் என்ன அம்சங்கள் இருக்கின்றன? கலர் ஆப்ஷன்கள் எவ்வளவு இருக்கிறது என்ற விரிவான விவரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனத்தின் கர்வ் காரைப் பொறுத்தவரை மொத்தம் கிரியேட்டிவ், அக்கம்ப்ளீஷ் மற்றும் எம்பவர்டு ஆகிய மூன்று விதமான அடிப்படை வேரியண்ட்கள் இருக்கின்றன. கலர் ஆப்ஷனை பொருத்தவரை பிரிஸ்டன் ஒயிட், ஃபிளேம் ரெட், எம்பவர்டு ஆக்ஸடைடு, ஃப்யூர் க்ரே, விர்ச்சுவல் சன் ரைஸ் ஆகிய ஐந்து விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இனி ஒவ்வொரு வேரியண்டிலும் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்ற தகவல்களை காணலாம்.

பேஸ் வேரியண்டை பொறுத்தவரை ஸ்மார்ட் டிஜிட்டல் டிஆர்எல் எல்இடி ஹெட் லைட்டுகள், 17 இன்ச் கொண்ட ஹைபர் ஸ்டைல் வீல்கள், பின்பக்க பார்க்ங் அசிஸ்டன்ட் கேமரா மற்றும் சென்சார். 17.78சென்டிமீட்டர் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹர்மோன் சவுண்ட் சிஸ்டம், 17.78 சென்டிமீட்டர் கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆறு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இதுபோக இந்த காரில் புஷ் என்ட்ரி புஷ் ஸ்டார்ட் தொழில்நுட்பம் க்ரூஸ் கண்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட்கள் எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம், 7.2 கிலோ வாட் ஏசி ஃபாஸ்ட் சார்ஜர், முழுமையான ஆட்டோ டெம்பரேச்சர் கண்ட்ரோல், ஐ-டிபிஎம்எஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.

அடுத்ததாக அக்கம்ப்ளிஷ்டு வேரியன்டை பொறுத்தவரை அனைத்து ஆப்ஷன்கள் போக கூடுதலாக எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட்டுகள், பின்பக்கத்தை கனெக்டெட் இண்டிகேட்டர், முன்பக்க ஃபார் லைட்டுகள் மற்றும் கார்னரிங் பங்க்ஷன் , 17 இன்ச் கொண்ட அலாய் வீல், 26.0 சென்டிமீட்டர் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, 26.03 சென்டிமீட்டர் கொண்ட டிஜிட்டல் காக்பிட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக கூல்டு மற்றும் இலுமினேட் செய்யப்பட்ட கிளவ் பாக்ஸ், லெதர் சீட்டுகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அலெக்ஸா வாய்ஸ் கண்ட்ரோல் பொருத்தப்பட்டுள்ளன. அக்கம்ப்ளிஸ்டு வேரியண்டில் பிளஸ் எஸ் என்ற கூடுதல் பேக்கேஜும் இருக்கிறது. முக்கியமாக இதில் 360 டிகிரி கேமரா, முன்பக்க பார்க்கிங் சென்சார், பானரோமிக் சன்ரூஃப், ஆர்கேடு இவி ஆப்ஸ், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஹில் ஹோல்டு மற்றும் ரெயின் சென்சிங் வைப்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அடுத்ததாக எம்பவர்டு வேரியண்டை பொருத்தவரை ஸ்மார்ட் டிஜிட்டல் லைட்டுகள், கார் ஸ்டார்ட் செய்யும் போதும் ஆஃப் செய்யும் போதும் சீக்கோன்ஸாக ஒளிரும் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக 18 இன்ச் கொண்ட அலாய் வீல்கள், மல்டி மூடு லைட், வாய்ஸ் கண்ட்ரோலில் இயங்கும் சன்ரூஃப், 31.24 சென்டிமீட்டர் கொண்ட சினிமாட்டின் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
இதுபோக இந்த காரில் அக்யூட் வெஹிகிள் அலர்ட் சிஸ்டம், காற்றின் தரத்தை கண்காணிக்கும் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ், டிஸ்ப்ளே, ஆட்டோ டிம் செய்யக்கூடிய ஐஆர்விஎம், முன்பக்க ஃபிரங்க் இட வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் எஸ் பேக்கேஜ் கூடுதலாக இருக்கிறது. இந்த பேக்கேஜில் கூடுதலாக அடாஸ்-2 தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 20 விதமான அம்சங்கள் இருக்கின்றன. இதுபோக பின்பக்க டெயில் கேட் பவர்டு டெயில்கேட்டாகவும் எஸ்ஓஎஸ் பங்க்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
வேரியன்ட் வாரிலான கலர் ஆப்ஷனை பொறுத்தவரை விர்ச்சுவல் சன்ரைஸ், ப்யூர் கிரே, பிரிஸ்டின் ஒயிட் ஆகிய கலர் ஆப்ஷன்கள் அனைத்து வேரியண்ட்களிலும் ஃபிளேம் ரெட் என்ற ஆப்ஷன் அக்கம்பிளிஸ்ட் மற்றும் எம்பவர்டு ஆகிய வேரியண்ட்களிலும், எம்பவர்டு ஆக்சைடு என்ற கலர் ஆப்ஷன் எம்பவர்டு வேரியண்டில் மட்டும் கிடைக்கும் வகையில் இந்த கார்கள் விற்பனைக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் கர்வ் இவி காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான அம்சங்கள் இருக்கிறது. மார்க்கெட்டில் உள்ள மற்ற போட்டி கார்களில் உள்ள ஆப்ஷன்களை விட இந்த கார்களில் ஆப்ஷன் அதிகமாக இருப்பதால் மக்கள் பலர் இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









