வேற எந்த கார்லயும் இந்த விஷயங்களை பார்க்க முடியாது! டாடா கர்வ் இவி காரில் எக்ஸ்க்ளூசிவ் இதான்!
டாடா நிறுவனம் இன்று தனது கூபே ஸ்டைல் எலvக்ட்ரிக் எஸ்யூவி காரான டாடா கர்வ் என்ற காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வரும் 12ம் தேதி முதல் டாடா ஷோரூம்களில் புக்கிங் செய்ய கிடைக்கின்றன. இந்நிலையில் இந்த காரில் சில சிறப்பான அம்சங்கள் இருக்கிறது. மற்ற எந்த நிறுவனம் தயாரிக்கும் காரிலும் இல்லாத அம்சங்களை டாடா நிறுவனம் இதில் புகுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் இன்று தனது கர்வ் என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் கூபே ஸ்டைல் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவில் அறிமுகமாகியுள்ள அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி கார் இதுதான். இந்த காரில் செக்மெண்டிலேயே புதிதாக பல்வேறு விதமான புதிய அம்சங்கள் இருக்கின்றன. இவ்வளவு அம்சங்கள் இருந்தும், இந்த கார் ரூ17.49 லட்சம் என்ற விலையில் தான் விற்பனைக்கு வருகிறது.

பேட்டரி: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த கர்வ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை பெரிய பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் உருவாக்கியுள்ளது. இந்த காரில் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. 45கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் மற்றும் 55கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 55 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் மற்ற எந்த கார்களிலும் இல்லாத அளவுக்கு அதிக கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது.
இந்த காரின் விலை ரேஞ்சிலேயே ஏற்கனவே விற்பனையாகி வரும் எம்ஜி இசட் எஸ் என்ற காரில் 50.3 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் தான் பொருத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வரும் எஸ்யூவி 400 காரில் 39.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் ஒப்பிடும்போது டாடா நிறுவனத்தின் கர்வ் காரில் தான் அதிக பேட்டரி பேக் ஆப்ஷன் இருக்கிறது.

ரேஞ்ச்: டாடா நிறுவனத்தின் கார் மார்க்கெட்டில் உள்ள அதன் போட்டி கார்களை விட அதிக ரேஞ்ச் தரும் கார்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த காரில் உள்ள 55 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட வெர்ஷன் எம்ஐடிசி ரேஞ்ச் படி 585 கிலோமீட்டர் வரை ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது. ரியல் வேர்ல்டில் வரும்போது இதன் ரேஞ்ச் மாறுபாடு இருக்க வாய்ப்புள்ளது.
இதுவே இதன் போட்டி கார்களான மகேந்திரா எக்ஸ்யூவி 400 காரை பொருத்தவரை ஒரு முறை சார்ஜ் போட்டால் 456கிலோமீட்டர் வரை மட்டுமே ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றொரு போட்டிக்காரனா எம்ஜி இசட்எஸ் காரை பொறுத்த வரை ஒரு முறை சார்ஜ் போட்டால் 461கிலோமீட்டர் வரை மட்டுமே ரேஞ்ச் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி பார்த்தாலும் டாட்டா கர்வ் கார் 100கிலோமீட்டர் வரை ரேஞ்ச் அதிகம் தருகிறது.

பூட் வசதி: டாடா கர்வ் காரில் செக்மெண்டிலேயே அதிக இட வசதி கொண்ட காராக இந்த காரை உருவாக்கியுள்ளது. இந்த காரில் 500லிட்டர் பூட் வசதி இருக்கிறது பின்பக்க சீட்டு 60க்கு 40 என்ற ரேஷியோவில் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 40% உள்ள சீட்டை மடக்கினால் 689 லிட்டராக அதிகரிக்கும். அதுவே 60 சதவீத சீட்டை மடக்கினால் 784 லிட்டராக மாறும். இதுவே இரண்டு சீட்டையும் மடக்கினால் 973 லிட்டராக மாறும்.
பவர்டு டெயில் கேட்: டாடா கர்வ் காரில் பின்பக்க கேட் பவர்டு கேட்டாக வழங்கப்பட்டுள்ளது. செக்மெண்டிலேயே முதல் காராக இந்த காரில் தான் அந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இதில் கெஸ்டர் கண்ட்ரோலும் வழங்கப்பட்டுள்ளது. கையில் பொருட்களுடன் வரும்போது காலை காருக்கடியில் நீட்டினால் தானாக பின்பக்கம் கேட் திறக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஏவிஏஎஸ் தொழில்நுட்பம்: டாடா கர்வ் காரில் முதன்முறையாக அக்யூஸ்டிக் அலர்ட் சிஸ்டம் என்ற புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 20 கிலோமீட்டர் குறைவான வேகத்தில் செல்லும்போது கூட்டமான சாலையில் கார் வருவது தெரியாமல் இருக்கும் என்பதற்காக செயற்கையாக சத்தத்தை உருவாக்கும். இதனால் சாலையில் செல்லும் நடைபாதை பயணிகள் உஷாராகி விலகிச் செல்ல முடியும்.
இதுவரை இந்த தொழில்நுட்பம் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட கார்கள் மட்டுமே பொருத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் இப்படி ஒரு தொழில்நுட்பத்தை இந்த காரில் பொருத்தி டாடா நிறுவனம் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளது. இதுவரை அரசு இப்படியான தொழில்நுட்பத்தை கட்டாயமாகவில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை தனது காரில் டாடா நிறுவனம் பொருத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் தனது கர்வ் காரை இந்திய மார்க்கெட்டில் களம் இறக்கும் போதே இது எஸ்யூவி செக்மெண்ட்டில் மிகப்பெரிய புரட்சியை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு பல்வேறு அம்சங்களை வடிவமைத்துள்ளது. இதில் இந்த குறிப்பிட்ட 5 அம்சம் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதனால் இந்த காரின் விற்பனை அதிகமானாலும் ஆச்சரியப்படுவதில்லை.


Click it and Unblock the Notifications









