குல தெய்வம் போல காக்கும்.. எமனாக பெரிய பெரிய டிரக்குகள் வந்தாலும் இந்த டாடா கார் சமாளிச்சிரும் போலையே!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக கர்வ் (Curvv) உள்ளது. இந்த காரை டாடா மோட்டார்ஸ் ஐசிஇ (பெட்ரோல் மற்றும் டீசல்) மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு விதமான அவதாரங்களிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டையும்தான் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பு அண்மையில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. அதன் முடிவுகளையே தற்போது அது வெளியீடும் செய்திருக்கின்றது. கர்வ் இவி மற்றும் ஐசிஇ இரண்டும் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கையே பெற்றிருக்கின்றன.

பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவருக்குமான பிரிவுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் அது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையே பெற்றிருக்கின்றது. டாடா கர்வ் ஐசிஇ பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு, 29.5 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 43.66 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது.

Tata curvv receives 5-star safety rating

இதேபோல், டாடா கர்வ் இவி பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 30.81 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 44.83 புள்ளிகளையும் அது பெற்றிருக்கின்றது. அதிக உறுதித் தன்மை மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே கர்வ்-இன் இரண்டு அவதாரங்களும் மிக அதிக பாதுகாப்பு புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் கர்வ் ஐசிஇ-இல் பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர் பேக்குகளை வழக்கமான பாதுகாப்பு அம்சமாக வழங்கி இருக்கின்றது. இத்துடன், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, லெவல் 2 அடாஸ் அம்சம், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்களை டாடா வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, எலெக்ட்ரானிக் பார்க்கிங், ஆட்டோ ஹோல்டு வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது. இதுமாதிரியான அதிக பாதுகாப்பு அம்சங்களையே டாடா கர்வ்-இவியும் தன்னுள் தாங்கியிருக்கின்றது. அதாவது, ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு அம்சம், ஹில் ஸ்டார்ட், இஎஸ்பி, டிரைவரின் தூக்க கலக்கம் குறித்து எச்சரிக்கும் அம்சம், லெவல் 2 அடாஸ், அவாஸ் எனும் புதிய அம்சம் உள்ளிட்டவையே கர்வ் இவியில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த அவாஸ் அம்சம் என்பது ஓர் அலர்ட் சிஸ்டம் ஆகும். அதாவது, 20 கிமீ வேகத்திற்கும் குறைவான வேகத்தில் செல்லும்போது செயற்கையான வாகன இயக்க ஒலியையே இது எழுப்பும். இதுபோன்று ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே டாடாவின் கர்வ் இவி மற்றும் கர்வ் ஐசிஇ இரண்டிற்கும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டாடா கர்வ் ஐசிஇ ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 990 தொடங்கி ரூ. 17 லட்சத்து 49 ஆயிரத்து 990-க்கு விற்கப்படுகின்றது. இதேபோல், டாடா கர்வ் இவி ரூ. 17.49 லட்சம் தொடங்கி ரூ. 21.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக தற்போது கர்வ் மாறி வருகின்றது. 2024 ஆகஸ்டு மாதத்தில் 3,455 யூனிட்டுகளும், கடந்த செப்டம்பர் மாதத்தில் 4,763 யூனிட்டுகளே அது விற்பனையாகி இருக்கின்றது. வரும் நாட்களில் இந்த விற்பனை எண்ணிக்கையானது மேலும் பலமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு வழிவகுக்கும் விதமாகவே தற்போது கர்வ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கர்வ் ஐசிஇ மற்றும் கர்வ் இவி இரண்டிற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இது ஓர் கூபே எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். சிட்ரோன் பசால்ட் கார் மாடலுக்கு போட்டியாகவே இது சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. பசால்ட் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 19:49 [IST]
English summary
Tata curvv ice and curvv ev earns 5 star safety ratings in bharat ncap crash test
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+